புனிதகள் சுவக்கின் அன்னாள் திருவிழா. | Veritas Tamil

புனிதகள் சுவக்கின் அன்னாள் திருவிழா.
இன்று நம் தாய்திருஅவை அன்னை மரியாளின் பெற்றோரும் இயேசுவின் தாத்தா பாட்டியுமான புனித சுவன்கீன் அன்னாளின் திருவிழாவை கொண்டாடுகிறது.
புனித அன்னாள் பெத்தலகேமில் பிறந்தார். நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கீன் என்பவரை திருமணம் செய்தார். இருவரும் தாவீது அரசரின் வழிமரபில்; பிறந்தவர்கள். இவர்கள் பற்றிய குறிப்பு திருவிவிலியத்தின் எந்த பகுதியிலும் இல்லை. ஆனாலும் இவர்கள் இருவர் வழியாகவே மனிதகுல மீட்புத்திட்டத்திற்கு காரணமான அன்னை மரியாள் என்னும் தெய்வீக வாசல் திறக்கப்பட்டது.
திருமணமாகி இறைவனின் அருளால் செல்வம் மிக்கவர்களாக இருந்தார்கள். செல்வம் கொண்டு வாழ்ந்தாளும் அது இறைவனால் தங்களுக்கு அளிக்கப்ட்டது என்ற உயர்ந்த ஞானத்தோடு எளிமையாக வாழ்க்கை நடத்தினர். எனவே இறைவன் தங்களுக்கென கொடுத்த செல்வத்தை, மூன்று பங்காக்கி ஒருபகுதியை ஏழைகளுக்கும், ஒரு பகுதியை இறைப்பணிக்கும் என கொடுத்து, ஒரே ஒரு பகுதியை மட்டுமே தங்களின் தேவைக்கென வைத்திருந்தார்கள்.
பொருட்செல்வம் மிகுந்திருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாது துன்புற்றனர். அக்காலத்தில் குழந்தைச் செல்வம் பெரும் பேராக கருதப்பட்டது. அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் இறைவனின் ஆசீரைப் பெற்றவர்கள் என்ற கருத்து நிலவியது. மலடியாய் இருப்பது பெரும் இழுக்கு. இறைவனுடைய சாபம் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் இருபது வருடங்கள் குழந்தையின்றி மலடியாக வாழ்ந்த புனித அன்னாளுக்கு இது பெரிய அவமானமாக இருந்தது. சமுதாயம் அவளை பலவிதமாக தூற்றியது. ஆனால் இவற்றில் எல்லாம் அவள் இறையன்பிலிருந்து விலகிவிடவில்லை. தாழ்ச்சியோடு தன் நிலையை ஏற்றுக்கொண்டார்.
இவரைப் போன்றே, சுவக்கீனும் சமூகத்தின் ஏளனத்துக்கு உள்ளானார். ஒரு முறை காணிக்கை செலுத்த எருசலேம் தேவாலயத்திற்கு செல்லும்போது பிள்ளை வரமற்றவர் என்ற காரணத்தினால் அவரின் காணிக்கை ஏற்றுக்கொள்ள படவில்லை. இதனால் அதிக மனவேதனையை அனுபவித்தார். எனவே தனித்திருந்து இறைவேண்டல் செய்ய பலைவனம் சென்றார்.
அன்னாவோ தனது துணைவர் சுவக்கீன் இருக்கும் இடம் அறியாததால் மிகுந்த துயரத்திற்கு உள்ளானாள். மேலும் பிள்ளைப் பேரற்ற நிலையோடு நிராகரிக்ப்பட்ட நிலையும் சேர்ந்ததால் துன்ப மிகுதியால் இறைவனிடம் இவ்வாறு செபித்தார். “இறைவனே! நான் ஏன் பிறந்தேன்” என அழுது புலம்பி, தனக்கு குழந்தை வரம் அருளப்பெற்றால் அக்குழந்தையை இறைப்பணிக்கே அர்ப்பணிப்பதாக உறுதி ஏற்றார். அவர்களின் நம்பிக்கையும் ஜெபமும் இறைவனால் ஏற்கப்பட்டது. நாற்பதாவது நாளில், புனித அன்னாள் தோட்டத்தில் ஜெபிக்கும்போது, வானதூதர் தோன்றி அன்னா “இறைவன் உன் ஜெபத்தை கேட்டுள்ளார். நீ கருவுற்று ஒரு குழந்தையை பெற்றெடுப்பாய். உன் சந்ததி உலகமெங்கும் புகழப்படும்.” அந்த குழந்தை மரியா என அழைக்கப்படுவாள். அவர் அனைத்து பெண்களிலும் மேலானவராக இருப்பாள், இறைவனின் அருள் நிரம்பியவளாக இருப்பாள் என்று வாக்களித்தார்.
அதே வானதூதர் சுவக்கீனுக்கும் தோன்றி. மரியாவின் பிறப்பை உறுதிப்படுத்தினார். அவர் வீட்டிற்கு திரும்பி அன்னாளை சந்திக்கச் சொன்னார். இருவரும் மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்ற நம் ஆண்டவரின் வாக்கிற்கு ஏற்ப இவ்வுலகில் யாருக்குமே கிடைக்காத கருவிலேயே புனிதபடுத்தப்பட்ட மாசணுகா மாமரியை பெற்றெடுத்தார். ஆணடவருக்கு வாக்கு கொடுத்தது போன்று மூன்று வயதுடைய தன் மகளை இறைப்பணிக்nகென ஆலயத்தில் அர்ப்பணித்தார்கள்.
புனித அன்னாள் பின்வரும் குழுக்களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுகிறார்:
1. தாய்மார்கள்இ
2. தாத்தா பாட்டிகள்
3. கர்ப்பமாக இருக்க விரும்பும் பெண்கள்
4. ஆசிரியர்கள்
5. தையல்காரர்கள் மற்றும்
6. சுரங்கத் தொழிலாளர்கள்
ஆகியவர்களின் பாதுகாவலியாக உள்ளார்.
குறிப்பாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் துறவற சபைகள் புனித அன்னாளை பாதுகாவலியாக கொண்டுள்ளார்கள். காரணம் அன்னை அன்னாள் அமர்ந்த நிலையில் தன் மடியில் ஒரு புத்தகத்தை திறந்து வைத்து. தன் மகளான மரியாளை அருகில் அமர்த்தி கற்றுக் கொடுப்பது போன்ற உருவப்பட்டம் புனித அன்னாளின் தனித்துவமான பங்கினை நமக்கு உணர்த்துகிறது. இறைவன் அன்னை மரியாளை அறிவிலும், இறைநம்பிக்கையிலும் புனிதத்திலும் நற்பண்புகளிலும் வளர்த்தெடுக்கும் புனித பணியினை அன்னை அன்னாளிடம் ஓப்படைத்திருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் பல தேவாலயங்களில் தூய அன்னா மரியாவுக்கு படிக்கக் கற்பிக்கின்ற நிலையில் திருஉருவம் அல்லது ஓவியமாக சித்தரிக்கப்படுகிறார்.
புனித அன்னாளின் பக்தி கிழக்குத் திருச்சபையில் 4ஆம் நூற்றாண்டிலேயே உற்சாகமானதாக இருந்தது. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அவரைப் பெருமைபடுத்தி பல தேவாலயங்கள் கட்டப்பட்டன. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருத்தந்தை கான்ஸ்டன்டைன் ரோமில் இவரது பக்தியை அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகின்றது.
சுவக்கீன் என்றால் ஆண்டவரின் தயாரிப்பு.
அன்னாள் என்றால் இறைவனது அருள் என்பது பொருளாகும்.
புனித அன்னாள் சுவக்கின் திருவிழாவை அர்த்தமுள்ளள விதத்தில் கொண்டாடும் பொருட்டு. மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் ஜீலை மாதம் நான்காம் வாரத்தை தாத்தா பாட்டிகள் தினமாக சிறப்பு செய்துஇ நம் வீட்டிலுள்ள முதியோர்களின் ஆசீரையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ள அழைப்புவிடுத்துள்ளார்.
திருத்தந்தை 13 ஆம் கிரகோரி ஜுலை 26ஆம் நாளை புனித அன்னாள் சுவக்கீன் திருவிழாவை ஏற்படுத்தி அவர்களைப் போன்று நாமும் செபத்தில் விடாமுயற்சியோடும்இ இறைசித்தம் நிறைவேறும் வரை பொறுமையுடனும் காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இன்றைய தினம் இப்புனிதர்களின் பரிந்துரையை நாடுவோம். இவரின் பாதுகாவலில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றுமுள்ள அனைத்து துறவற சபைகளுக்காக இறைவனிடம் மன்றாடுவோம்.
புனிதகள் சுவக்கின் அன்னாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Daily Program
