திருத்தந்தை லியோவின் 70வது பிறந்தநாளைப் பற்றிய 5 ஆச்சரியமான உண்மைகள் | Veritas Tamil

திருத்தந்தை லியோவின் 70வது பிறந்தநாளைப் பற்றிய 5 ஆச்சரியமான உண்மைகள்

செப்டம்பர் 14, 2025

 புனித பேதுருவின் 267வது வாரிசான நமது   திருத்தந்தை லியோ XIV தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் உலகத்தால் ஒரு ஆன்மீகத் தலைவராக அறியப்பட்டாலும், அவரது வெள்ளை அங்கிக்கப் பின்னால் நம்பிக்கை, பணிவு, மற்றும் ஒரு சிறு நகைச்சுவை உணர்வுடன் கூடிய ஒரு வண்ணமயமான வரலாறு கொண்ட மாமனிதர்.

 

திருத்தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி  ஐந்து ஆச்சரியமான உண்மைகள் இங்கே:

அவர் சிறுவயதில் "மறைமாவட்ட குருவாக விளையாடினார்."

சிறுவயதில், அவரது சகோதரர்கள் காவலர் மற்றும் திருடன் விளையாடியபோது, ராபர்ட் ப்ரெவோஸ்ட் தனது அறையில் ஒரு இஸ்திரி பலகையை பலிபீடமாக அமைத்து, குருவாக ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றுவது போல நடித்து விளையாடுவார்

 

ஆறாவது வயதில் பலிபீடச் சிறுவனாக இருந்தார்.

திருத்தந்தை லியோவிற்கு திருஅவை மீதான அன்பு சிறுவயதிலேயே தொடங்கியது. ஆறு வயதிலேயே அவர் பலிபீடச் சிறுவனாக தினமும் திருப்பலியில் கலந்துகொண்டார். மேலும் லத்தீன் மொழியில் ஜெபங்களை மனப்பாடமாகச் சொல்லக்கூடியவராக இருந்தார். அந்த ஆரம்ப கால பக்தியே அவரை குருத்துவப் பாதைக்கும்இறுதியில் திருத்தந்தை பதவிக்கும்வலுவாக இட்டுச் சென்றது.

 

அவர் தனது அகஸ்டின் சபைக்கு முதல் இணையதளத்தை உருவாக்கினார்.

திருத்தந்தை  ட்விட்டர் கணக்குகள் வைத்திருந்த காலத்திற்கு முன்பே, அருட்தந்தை ப்ரெவோஸ்ட் டிஜிட்டல் ரீச் என்ற புதிய முயற்சியில் முன்னோடியாக இருந்தார். அவர் மிட்வெஸ்ட் அகஸ்டீனியன் சபைக்கு முதல் இணையதளத்தை உருவாக்கினார். இது அவருக்கு ஒரு மேய்ப்பரின் இதயமும் தொழில்நுட்பத்தில் ஒரு திறமையும் இருப்பதைக் காட்டியது.

 

தனது மறைமாவட்டத்திற்காக நிதி திரட்ட பழைய கார்களை சரிசெய்தார்.

பெருவின் சிக்கலாயோவில் அவர் வேதபோதக பணியாளராய் இருந்த போது  ஒரு ஆச்சரியமான பகுதிநேர வேலை செய்தார்: விபத்துக்காளால் சிதையுண்ட  லாரிகளை வாங்கி, அவற்றை சரிசெய்துஇ தனது மறைமாவட்டத்திற்காக பணம் திரட்டுவதற்காக அவற்றை மீண்டும் விற்றார். அவர்உண்மையான அரசாங்கத்தை விடபிராந்தியத்தை மாற்றுவதற்கு அதிகமாகச் செய்தார் என்று அவரது பங்கினர் அவரது அயராத முயற்சிகளைப் பற்றி வேடிக்கையாகச் சொல்கிறார்கள்.

 

அவரது பிறந்தநாட்கள் ஒரு வாரம் முழுவதுமாக நீடிக்கும்.

சிக்கலாயோவில், திருத்தந்தை லியோவின் பிறந்தநாள் ஒரு நாள் மட்டுமல்லஅது ஒரு வார கால கொண்டாட்டமாக இருந்தது. மறைமாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பங்குத் தலமும் அவருக்கு ஒரு கேக் செய்துகொடுத்தது. இதனால் அவர் சிலசமயம் டஜன் கணக்கான இனிப்பு வகைகளுடன் கொண்டாடுவார்.

 

சிறுவனாக "மறைமாவட்ட குருவாக விளையாடியதில்" இருந்து உலகளாவிய திருஅவையின் தலைவராக மாறியது வரை, லியோ -இன் கதை ஒரு சாதாரண தொடக்கம், கடின உழைப்பு மற்றும் ஆச்சரியமான திறமைகள் நிறைந்தது. திருத்தந்தை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.