விண்ணகத் தூதர்கள் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

விண்ணகத் தூதர்கள் 
விண்ணில் வாழ்பவர்கள் மட்டுமல்ல; விண்ணின் தூதர்களாக மண்ணில் வாழும் மாந்தருக்கு விண்ணகச் செய்திகளை விரைந்து வழங்கும் தூதுஅஞ்சல்காரர்கள்!

கடவுளின் கனிவான பார்வையில் முப்பொழுதும் முழுமையான மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அவரைப் போற்றிப் பாடி மகிழும் பெறுபெற்றவர்கள் இவர்களே!

நாம் எல்லாருமே விண்ணகத் தூதர்கள்தான் என்றால் வியப்பளிக்கிறதா ? 
நாம் மனித உடலில் மறைந்து வாழும் விண்ணகத் தூதர்கள் என்பதை அறியீரோ?!

விண்ணகத் தூதர்கள் வியக்கத்தக்கவர்கள். நாம் நம்பிக்கை இழக்கும் வேளையில், நம்பிக்கையை விதையை மனதில் விதைத்து, விருட்சமாய் வீறுநடை போட வைப்பவர்கள்!

விண்ணகத் தூதர்கள் அன்பின், அமைதியின், அருளின், பரிவின், நற்பண்பின் உறைவிடங்கள். 
இம் மண்ணுலகில் நல் மனிதராக நம்மை வாழ அழைக்கும் அருளாளர்கள்!

விண்ணகத் தூதர்கள் சுமைகளின்றி இருப்பதால்தான் எளிதாகப் பறக்கிறார்களோ?
எளிய மனம் கொண்டு ஏற்றமிகு வாழ்வு வாழ நாமும் முடிவெடுப்போமா?!
 ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதரைக் கடவுள் கருணையோடு வழங்கியுள்ளாரே. அவருடைய அருட்காவலில் அச்சமின்றி, ஆற்றலோடு பயணிப்போமா?!

வாழ்க வளமுடன் நலமுடன்!!