இந்தியாவின் இமாச்சலில் உள்ள மருத்துவமனைக்கு SOS தாலசீமியா ஆதரவு! | Veritas Tamil
உரோமில் உள்ள எஸ்.ஓ.எஸ் தலசீமியா இ.டி.எஸ் கூட்டமைப்பு, உகாண்டாவின் வட பகுதியில் உள்ள கலோங்கோ என்னுமிடத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்ப்ரோசோலி நினைவு மருத்துவமனையில் அரிவாள் செல் இரத்த சோகை( Sickle Cell Anemia) எனப்படும் ஒருவித தீவிர இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 250 குழந்தைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையை வழங்கி வருகின்றது.
மறைப்பணியாளரும் மருத்துவருமான கியூசெப்பே அம்ப்ரோசோலி என்பவரால் 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டு, தற்போது இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மறைமாவட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மருத்துவமனை, ஏழ்மையான மற்றும் தொலைதூரப் பகுதியில் உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குச் சேவை செய்து வருகிறது.
இந்த அமைப்பானது 'ஆப்பிரிக்காவிற்கான எஸ்.ஓ.எஸ் (SOS for Africa) என்ற தனது திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு ஹைட்ராக்சியூரியா (hydroxyurea) எனும் மருந்தைப் பயன்படுத்தி ஒரு வருட கால சிகிச்சையளித்து வருகிறது. இந்த மருந்தானது, ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் அரிவாள் செல் இரத்த சோகை நோயினால் ஏற்படும் உடல்நலக் குறைவையும் இறப்பு விகிதத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.
இந்த நோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், "முறையான சிகிச்சையாளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்" என்றும், "மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தற்காலிகத் தடையால் ஏற்படும் கடுமையான உடல் உறுப்பு பாதிப்புகளைத் தடுக்கலாம்" என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மறைப்பணியாளரும் மருத்துவருமான கியூசெப்பே அம்ப்ரோசோலி என்பவரால் 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டு, தற்போது இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மறைமாவட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மருத்துவமனை, ஏழ்மையான மற்றும் தொலைதூரப் பகுதியில் உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குச் சேவை செய்து வருகிறது.
வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலிலும் அம்ப்ரோசோலி அறக்கட்டளை மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுடன், இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.