இயேசுவின் உயிர்ப்பு | அருட்சகோதரி செலஸ்டி சலேஸ் SSAM | Veritas Tamil

உயிர்ப்பு பெருவிழா என்பது...

ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல மாறாக உள்ளம், மனம், அறிவு ஆன்மீகம் . சமூகம் பொருளாதாரம் கலாச்சாரம் பண்பாடு சார்ந்ததும் கூட என்பதை உணர முடிகிறது. இயேசு தந்தை கடவுளோடும் தூய ஆவியானவரோடும் தன் சிந்தனை சொல் செயல் அனைத்திலும் இணைந்து இருந்தார். அதனால் பாவிகள் நமக்காக இறந்தார். மூன்றாம் நாள் உயிர்த்தார். கிறிஸ்தவம் குடும்பங்களில் வேருன்றி திருஅவையாய் உருப்பெற்றது. திருஅவையின் ஒவ்வொரு இல்லமும் (இல்லறம், துறவறம்)கீழ்காணும் சிறந்த பண்புகளோடு திகழ்ந்தால் அது கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பின் அடையாளமே !!!

இல்லம் என்பது...

நமது தமிழர் பண்பாட்டில் வெறும் தங்கும் இடம் மட்டுமல்ல, மாறாக அது மாபெரும் ஆற்றல் நிம்மதி மற்றும் தெய்வீகத்தின் ஊற்றாகிறது.

அறம் பொருள், இன்பம் நிறைந்தது.

ஒருவருக்கு மன அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்வாழ்வையும் உறுதி செய்கிறது.

இறை சக்தியை ஈர்க்கும் வகையில் நாகரீகத்தின் அடையாளமாகவும், ஒற்றுமையை வளர்க்கும் ஒரு தெய்வீக இடமாகவும் மாறுகிறது.

பாதுகாப்பான சூழலை வழங்கி மன அமைதியை மேம்படுத்துகிறது.

+ பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

உணர்வு. அறிவாற்றல் வளர்ச்சிக்கு ஆதரவான சூழலை தருகிறது.

நல்லிணக்கத்தையும், நல்லொழுக்கத்தையும் உருவாக்குகிறது.

விருந்தினர்களை வரவேற்று உறவுகளை வலுப்படுத்துகிறது

பகிர்தல், சேமித்தல், கூடி வாழ்தல் இவற்றின் பிறப்பிடமாக உள்ளது.

உறவினர்களுடன் உள்ள தொடர்பையும் மரபையும் பேணுகிறது

பாரம்பரியத்தை கட்டிக் காக்கிறது.

சத்தான உணவு, ஆரோக்கியத்திற்கான மூலிகைகள் கிடைக்கிறது.

நீதி நெறிமுறைகள், ஒழுக்கம் அறநெறிமுறைகள் இவைகளை கற்றுக்கொடுக்கிறது.

வாழ்க்கையின் கல்விக்கூடமாக செயல்படுகிறது.

திறமைகளை வளர்ப்பதற்கு ஏற்ற தளமாக செயல்படுகிறது.

பாரம்பரிய கலைகள் மொழி இசை, நடனம் இவைகளை வளர்த்தெடுக்கும் கலைக்கூடமாக காணப்படுகிறது.

+ சவால்களை சமாளிக்க துணிச்சலை தருகிறது.

+ ஆக்கமும் ஊக்கமும் அள்ளித்தருகிறது.

நன்மை தீமை பிரித்தறிய சொல்லி தருகிறது.

இத்தகைய சிறப்பியல்புகளால் அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில், உயிர்ப்பின் அடையாளமாக திகழ்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உயிர்த்த இயேசுவின் பிரதிபிம்பங்களாக வாழ்ந்து, இயேசு எனது இறைவன் என்று எடுத்துச் சொல்லுவோம் ஆசை தீர் இயேசு நாமம் பாடி புகழுவோம். உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு குடிகொண்டால் இல்லத்தில் உள்ளோரின் உள்ளத்தில் உவகையே உள்ளத்து உலகையே உயிர்ப்பு.

உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள் !!!

 

அருட்சகோதரி செலஸ்டி சலேஸ்SSAM

மீஞ்சூர் சென்னை