காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை! | ஆர்கே. சாமி | Veritas Tamil

24 ஜூலை 2025
பொதுக்காலம் 16ஆம் வாரம் – வியாழன்
விடுதலை பயணம 19: 1-2, 9-11, 16-20
மத்தேயு 13: 10-17
காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை!
முதல் வாசகம்.
எகிப்பதை விட்டுப் புறப்பட்டு வந்த இஸ்ரயேலர், மூன்றாம் மாதம் முதல் நாளில் சீனாய் அடிவாரத்தை வந்தடைந்தனர். அங்கு மேகங்கள், புகை, இடி, நெருப்பு மற்றும் மின்னல் ஆகியவற்றின் நடுவில் சீனாய் மலையை ஏற மோசே கடவுளால் அழைக்கப்படுகிறார்.
மோசே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்றும், மோசேக்கு கடவுளின் திட்டங்களும் கட்டளைகளும் வெளிப்படுத்தப்படும் என்றும், மோசே அவற்றை மக்களுக்கு அறிவிப்பார் என்றும் கடவுள் மக்களுக்குத் தெரிவிக்கிறார். மக்கள் அலையடிவாரத்தில் காத்திருக்கும்போது, ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். மோசே மலையில் ஏறத் தொடங்குகிறார். தங்கள் தலைவர் கடவுளுடன் கலந்துரையாட புயல் மேகங்களுக்குள் செல்வதைக் கண்டு இஸ்ரவேலர் திகைத்துப் போகிறார்கள்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் உவமைகளில் அவர் பேசியது குறித்து அவரிடம் கேட்டபோது, விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று பதிலளிக்கிறார்.
இயேசுவைச் சுற்றி கூடியிருந்த மக்களைவிட, சீடர்கள் பேறுபெற்றவர்கள் என்கிறார் ஆண்டவர். ஏனெனில், அவர்களின் ஆன்மீகக் கண்களும் காதுகளும் திறக்கப்படுகின்றன கடந்த கால இறைவாக்கினர் தவறவிட்ட விடயங்களை சீடர்கள் அறிந்திட வாயப்புப்பெற்றுள்ளனர் என்கிறார் ஆண்டவர்.
பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இறைவாக்கினர்களின் போதனைக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே, விண்ணரசின் மறைபொருளை அறிய அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. மேலும் விண்ணரசு என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒன்று. அதை எளிய மக்கள் புரிந்துகொள்வது கடினம். எனவேதான் அவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாக இயேசு உவமைகள் வாயிலாக விண்ணரசுப் பற்றிய அறிவுறுத்தலை மக்களுக்கு வழங்கலானார். அடுத்து, மெசியா வரும்போது, எசாயாவின் இறைவாக்கின்படி மெசியா உவமைகளில் பேசுவார் என்று முன்னுரைத்ததும் இவ்வாறு நிறைவேறியதாக இயேசு கூறுகிறார்.
சிந்தனைக்கு.
கடவுள் உண்மையிலேயே ஒரு மறைபொருள். அவ்வாறே, விண்ணரசும் ஒரு மறைபொருளாகவே உள்ளது. ஆனால் அதற்காக நாம் கடவுளை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் இருளில் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நாம் ஒளியில் நடந்து ஞானம் பெற வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில்,
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் என்று குறிப்பிட்டார்.
ஆம், கடவுள் விளக்கிட முடியாத தந்துவப் பொருள். இன்றைய நற்செய்தியில் இயேசு தம்முடைய சீடர்களிடம், அவர் ஏன் உவமைகள் வழியாகப் பேசினார் என்பத்றகான விளக்கத்தைத் தருகிறார். இயேசுவின் உவமைகளை நாம் திறந்த மனதுடனும் இதயத்துடனும் வாசித்தறிய வேண்டும். அவை நமக்கு அறிவொளி அளிக்கும். கடவுளின் வார்த்தையையும் அவருடைய அரசையும் நாம் கேட்கவும் புரிந்துகொள்ளவும் விரும்பினால், நாம் உவமைகளை ஆய்ந்தறிவது இன்றியமையாதது.
உவமைகளைப் பன்படுத்தி பலர் போதித்தருந்தாலும், மிகவும் கைத்தேர்ந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தியவர் இயேசு என்பதில் ஐயமில்லை. அவர் மக்கள் அறிந்திருந்த பொருள்களைக் கொண்டு, சிறிய கதைகளை உருவாக்கி, அவற்றின் வழியாக மிக ஆழ்ந்த உண்மைகளை, குறிப்பாக கடவுள், மற்றும் அவரது அரசு பற்றிய உண்மைகளை பாமர மக்களுக்கு அறிவித்தார். அதே உவமைகள் வாயிலாக இன்று நமக்கும் போதிக்கிறார்.
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களும் கடவுளைப் புரிந்துகொள்ளாமல் முணுமுணுத்தார்கள். மோசேவிடமிருந்தும் எதையும் கற்றுக்கொள்ள அவர்களுக்குப் பொறுமையில்லை, ஆகவே, இறுதிவரை துனபுற்றாரக்ள
இயேசுவின் போதனையைக் காது கொடுத்துக் கேட்கவில்லை அல்லது அவர்கள் இயேசுவிடமிருந்து குற்றம் காணும் நோக்குடன்தான் அவருடைய போதனையைக் கேட்டார்கள் என்று சொல்லவேண்டும். மேலே பவுல் சொன்னது போன்று, இயேசுவின்மீது நம்பிக்கை ஏற்படவேண்டும் என்றால், அவருடைய போதனையைக் கேட்பதோடு புரிந்தகொள்ள முயற்சிக்க வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உம் வார்த்தை எனது உள்ளத்தில் பதிந்து, வேர்விட்டு என் வாழ்வில் நற்கனிகளைத் தாராளமாகக ஃகொடுத்திட அருள்தாரும். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
