முதுமையிலும் சாதனை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

சிவகங்கை மாவட்டம் வார்ப்பட்டு கிராமத்தில் பிறந்தவர் கோவிந்தன். போட்டிகளில் மூன்று ஆண்டுகளாக பங்கேற்று நான்கு முறை தங்கம் 80 வயதான இவர் தேசிய அளவிலான முதியோருக்கான தடகள வென்று சாதனை படைத்துள்ளார்.

தடகளப் போட்டி பற்றிய செய்தியைப் படித்திருக்கிறார். ஏன் நான் இந்தப் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தித்தாளில் முதியோருக்கான போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என்ற கேள்வி இவருக்கு எழுந்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த பொசலான் என்பவரின் வழிகாட்டுதலில் முதியோருக்கான போட்டியில் பங்கெடுக்க ஆரம்பித்தார்.


சிவகங்கை மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் முதன்முறை பங்கெடுத்து மாவட்ட அளவில் நான்காம் இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான, 75 முதல் 80 வயது பிரிவினருக்கான 800, 1500 மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுத்து மூன்று போட்டிகளிலும் முதலிடம் பிடித்தார். 2016ஆம் ஆண்டில் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த அதே பிரிவு விளையாட்டுகளிலும் பங்கெடுத்து தங்கம் வென்றார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போடியில் தமிழகம் சார்பாக பங்கெடுத்து, தங்கம் வென்று சாதனை படைத்தார்.

பள்ளிப்பருவம் முடிந்து சுமார் 65 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இவர் உள்ளத்தில் பிறந்திருக்கிறது. உலக அளவில் பங்கெடுத்து இந்தியாவுக்குத் தங்கம் வாங்கிப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆவல் இவரை முன்னோக்கித் தள்ளுகிறது. மனைவி மற்றும் நண்பர்கள் ஆகியோரின் உறுதுணை இன்னும் இவரைச் சாதிக்கத் தூண்டுகிறது. முதுமை முடங்கிப்போகும் வயதுமில்லை. அது சாதனைக்குத் தடையுமில்லை.

 பெரிய செயல்கள் செய்ய பிறந்தவர்கள் நாம் என்ற நம்பிக்கை நம்முள் இருந்தால் வெற்றி நிச்சயம்.

 

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.