விருதுகள் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

மனிதரின் அடிப்படைத் தேவையான பாராட்டப்பட வேண்டும் என்னும் இதய ஆவலைத் தணிக்கும் 
நீர்த் தடாகம்!

விருதுகள் பெறுவதில் சிறப்பு உண்டு;
வாங்கப் படுவதில் இல்லை. தகுதியானவர்களுக்கு அவை வழங்கப்பட வேண்டுமே அன்றி, பெறுவதால் எவர் தகுதியும் உயர்வதில்லை! 

விருதுகள் உங்களைத் தேடி வந்தால் பிறர் முன் நீங்கள் சிறப்புடையவர்களாகி மலைபோல் உயர்ந்து நிற்பீர்கள்; அவற்றை நீங்கள் விரும்பித் தேடினால், 
தரம் தாழ்ந்து, மதிப்பிழந்து போவீர்கள்! 

விருதுகள் அளிக்கும் புகழ் புகை போல் மறைந்து போகும்; நற்செயல்களாலும் நற்பண்புகளாலு ம் மக்கள் மனதில் நீங்கள் பெறும் இடம் நீங்கா புகழைப் பெற்றுத் தரும்!

விருதுகள் 
உங்கள் சாதனைகளின் அளவுகோல் அல்ல; 
உங்கள் மனநிறைவே ஆகச் சிறந்த அளவுகோல்!

இவ்வுலகம் தரும் விருதுகளைக் காட்டிலும், வாழ்வின் இறுதியில் விண்ணுலகம் நுழைய, படைத்தவன் தரும் நுழைவுச் சீட்டே உயர் மதிப்புள்ள விருது அன்றோ?!

வாழ்நாள் சாதனையாளர் விருதை வாழும்போதே பெறுவதைவிட, 'வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே!' என வாழ்நாளின் இறுதியில் பெறும் வாழ்த்து அன்றோ வாழ்நாள் சாதனை!

வாழ்க வளமுடன் நலமுடன்!!!