கோடை விடுமுறையும் தலைமுறையும் | Veritas Tamil

கோடை விடுமுறையும் தலைமுறையும்

கோடை விடுமுறையில்...

இல்லத்தில் உள்ளோரின் உள்ளத்தில் உவகைப் பொங்குகிறது இல்லம் நம்மை வெம்மை தீண்டாமல் காக்கிறது. சொந்தங்களின் அறிமுகம் சிறகடித்து பறக்க உதவுகிறது பார்க்காத சொந்தபந்தங்களைப் பார்க்க முடிகிறது குடையும், குவலை நீரும் அத்தியாவசிய தேவையாகிறது மாபெரும் போற்றலும் ஆற்றலும் தேற்றலும் கிடைக்கிறது பதற்றம்,பராக்கு பரிதவிப்பு, பாதகம் குறைகிறது உறவினர்களின் பணிவும் துணிவும் வியப்பூட்டுகிறது உறவுகளின் இருப்பும் விருப்பும் அவசியமென புரிகிறது பகிர்தல், பார்த்தல், சிரித்தல், படித்தல் நடைபெறுகிறது குடும்பங்களின் மரபும் பாரம்பரியமும் அறிய முடிகிறது நடை, உடை, பாவனை முன்னேற்றம் அடைகிறது அப்பழுக்கற்ற ஆன்மீகம் நங்கூரமாய் பாய்ச்சப்படுகிறது. சவால்களை சமாளிக்கும் சாதூரியம் வளர்க்கப்படுகிறது சாதிக்கும் எண்ணம் நீங்கா வண்ணம் புகுத்தப்படுகிறது. ஆக்கமும், ஊக்கமும், பூத்துக்குலுங்கும் தருணமாகிறது குலதெய்வங்களின் மகிமை கொண்டாடப்படுகிறது. இயல், இசை, நாடகத்தின் மகத்துவம் புரிகிறது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இரட்டிப்பாக்குகிறது விருந்தினர்களின் வருகையால் வீடு கோலாகலமாகிறது அன்பையும் பாசத்தையும் அள்ளிப் பருக முடிகிறது புண்பட்ட அனுபவப்பகிர்வால் பண்பட்ட பக்குவம் பெறமுடிகிறது தென்றலின் வருடலில் படைத்தவரை உரை முடிகிறது நிகழ்பவை நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கிறது. எனவே கோடையும் அரும்பெரும் கொடையே!!! கோடிஸ்வரரும் விரும்புவர் இந்த கோடை விடுமுறையை!!!

அருட்சகோதரி செலஸ்டி சலேஸ்

மிஞ்சூர்