"நமது அன்பான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, படைப்பின் பராமரிப்புக்கான இந்த உலகப் பிரார்த்தனை தினத்தின் கருப்பொருள் 'அமைதி மற்றும் நம்பிக்கையின் விதைகள்' ஆகும்" என்று அவர் கூறினார். "இந்த பிரார்த்தனை தினம் நிறுவப்பட்ட பத்தாவது ஆண்டு நிறைவில், புகழனைத்தும் உமதே! (Laudato Si’) என்னும் ஆவணம் வெளியிடப்பட்டு ' நம்பிக்கையின் திருப்பயணிகளாக' என்று இந்த தற்போதைய யூபிலியை நாம் கொண்டாடுகிறோம்."