கடவுள் வாழ்கின்ற ஒவ்வொரு உறவும் நமக்கான ஒரு கொடை திருத்தந்தை பதினான்காம் லியோ உரை. | Veritas Asia

ரோமில் உள்ள காஸ்தல் கந்தோல்போவில் உள்ள காவலர் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது கடவுள் வாழ்கின்ற ஒவ்வொரு உறவும், நமக்கான ஒரு கொடையாக மாறுகிறது என்றும், அவருடைய ஒரே மகன் இயேசு நம் சகோதரராகும்போது, அவருடைய தந்தை நம் தந்தையாக மாறுகிறார், தந்தையையும் மகனையும் இணைக்கும் தூய ஆவியார் நம் இதயங்களில் வாழ்கின்றார் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ.
சகோதர சகோதரிகள் என்பது உறவைக் குறிக்கும் பெயர்களாகவும், அடிக்கடி திருவழிபாட்டில் பயன்படுத்தும் ஒரு வாழ்த்துச் சொல்லாகவும் இருக்கின்றது என்றும், நெருக்கம் மற்றும் அன்பின் அடையாளங்களாகத் திகழ்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.சமூக ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் அநீதிகளை எதிர்கொள்ள வேண்டும், தீமை வெல்லும் என்று நினைக்கும் சோதனைக்கு அடிபணிய வேண்டாம் என்றும், போர் மற்றும் வன்முறை நிறைந்த இக்காலத்தில் உண்மையில் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கடவுளின் அன்பு மிகவும் பெரியது, இயேசு தனது தாயை கூட தனக்காக வைத்துக் கொள்ளவில்லை, மாறாக, சிலுவையின் அடியில் அவரை நமக்குத் தாயாகக் கொடுத்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், “கிறிஸ்துவின் தாயை விட அன்னை மரியா கிறிஸ்துவின் சீடராக இருப்பது மிகவும் மதிப்புமிக்கது” என்று எழுதிய புனித அகுஸ்தினாரின் வரிகளையும் நினைவுகூர்ந்தார்.
அன்னை மரியாவினது வாழ்வின் அர்த்தம், கடவுளிடமிருந்து பெற்ற வார்த்தையாம் இறைவனுக்கு அவர் நம்பிக்கையாக இருப்பதில் பாதுகாக்கப்படுகிறது என்றும், வார்த்தையாம் இறைவனை தனது வாழ்வில் ஏற்றுக்கொண்டு, தன் வயிற்றில் சுமந்து, உயிருள்ள வார்த்தையாக இவ்வுலகிற்கு அவரைக் கொடுத்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
2025 ஆம் ஆண்டாகிய இந்த யூபிலி ஆண்டில், Virgo fidelis அன்னை மரியாவின் 75ஆவது ஆண்ச்டு நிறைவைக் கொண்டாடும் காஸ்தல் கந்தோல்போவில், 1949 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்கள் Virgo fidelis அன்னை மரியாவை காஸ்தல் கந்தோல்போ காவலர்களின் பாதுகாவலராக அறிவித்ததையும் நினைவுகூர்ந்தார்.இயேசு சபையினர் இல்லம் என்று அழைக்கப்படும் இயேசு சபையினருக்கு ஒருகாலத்தில் சொந்தமாக இருந்த இவ்விடமானது திருஅவையால் குடிமக்கள் சிலர் மற்றும் காவலாளர்கள் பயன்படுத்தக் கொடுக்கப்பட்டது.
1741 ஆம் ஆண்டில், திருத்தந்தை 14-ஆம் பெனடிக்ட் அவர்கள் இச்சிற்றாலயத்திற்கு வருகை தந்து திருப்பலியை நிறைவேற்றினார். புனித பிரான்சிஸ் போர்ஜியோ திருவிழாவை இங்குக் கொண்டாடி மகிழ்ந்தார்.
Daily Program
