பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திருத்தந்தை செபிக்கிறார். | Veritas Tamil

பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திருத்தந்தை செபிக்கிறார்.
காஸ்டல் காண்டோல்போவில் மூவேளை செபத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்டோர் இறந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் திருத்தந்தை லியோ நினைவு கூர்ந்தார்.
காஸ்டல் காண்டால்போவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ( (Piazza della Libertà)) மூவேளை செபத்தை ஜெபித்த பிறகு, கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாள மக்களுக்கு திருத்தந்தை லியோ தனது நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.
"பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காகவும், இந்த பேரிடரின் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும்" திருத்தந்தை தமது வருத்தத்தையும் செபத்தையும் அர்ப்பணித்தார். இரண்டு நாட்களாக பெய்த மழை மற்றும் திடீர் வெள்ளத்திற்குப் பிறகு வடமேற்கு பாகிஸ்தான், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
பாகிஸ்தானில், வியாழக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய 3,500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்புக் குழுக்கள் வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நுனர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டன. மேலும் நிலச்சரிவுகள் மற்றும் சேதமடைந்த சாலைகளில் தொழிலாளர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
உலகில் அமைதிக்கான தனது தொடர்ச்சியான அழைப்புகளை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை லியோ, போர்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பலனளிக்க வேண்டும் என்றும், "ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும், மக்களின் பொது நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
நம்பிக்கையின் அறிகுறிகள்
கோடை மாதம் விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்படும் கலாச்சார மற்றும் நற்செய்தி கூட்டங்கள் பற்றிய செய்திகளைப் தான் அறிந்ததாக திருத்தந்தை கூறினார். "நற்செய்தியின் மீதான ஆர்வம் அனைத்து வயதினரையும் சேர்ந்த குழுக்கள் மற்றும் சங்கங்களின் படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதைக் காண்பது" எவ்வளவு ஊக்கமளிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தாலியின் ரிச்சியோனில் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாடு உதாரணத்தைப் பயன்படுத்தி, திருத்தந்தை இந்த வகையான நிகழ்வுகளை ஊக்குவிக்கவும் பங்கேற்கவும் உதவிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
Daily Program
