கோடைகால இல்லத்திலிருந்து வத்திக்கானுக்குத திரும்பிய  திருத்தந்தை | Veritas Tamil

கோடைகால இல்லத்திலிருந்து மீண்டும் வத்திக்கானுக்குத திரும்பிய   திருத்தந்தை

 கோடைகால இல்லத்திலிருந்து மீண்டும் வத்திக்கானுக்குத திரும்பிய   திருத்தந்தை ஆயுத வர்த்தகத்தைக் கண்டிக்கிறார். இன்று மாலை காஸ்டல் காண்டால்போவை விட்டு வெளியேறுவதற்கு முன்இ திருத்தந்தை லியோ XIV சில பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்காக நின்று, சர்வதேச நடப்பு விவகாரங்கள் குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.


"ஒவ்வொருவரும் ஆயுதங்களை விட்டுச் செல்லவும், ஒவ்வொரு போருக்கும் பின்னால் இருக்கும் பணம் சம்பாதிப்பதை விட்டுவிடவும் நாம் ஊக்குவிக்க வேண்டும்."

16  நாட்களுக்கு பிறகு காஸ்டல் காண்டால்போவில் உள்ள தனது கோடைகால இல்லத்திலிருந்து புறப்பட்டு, வத்திக்கானுக்கு இன்று இரவு 9 மணிக்கு சற்று முன்பு திரும்பிய திருத்தந்தை பத்திரிகையாளர்களிடம் கூறிய வார்த்தைகள் இவை.

காசா போன்ற போர்கள் அதிகம் நிறைந்த இடங்களுக்கு பயணம் செய்வதற்கான சாத்தியத்தைப் பற்றி பேசும் போது “நான் தனிப்பட்ட முறையில் செல்ல விரும்பும் பல இடங்கள் உள்ளன; ஆனால் அது போருக்கான பதிலை கண்டறியச் செய்யும் சூத்திரம் என்று அவசியம் இல்லை” எனக் திருத்தந்தை லியோ விளக்கமாக கூறினார்.


"பல நேரங்களில், ஆயுத வர்த்தகத்தால், மனத உயிர்களுக்கு எந்த விதமான மதிப்பும் இல்லாது,  வெறும் கருவிகளாக மாறுகிறார்கள்" என்று அவர் வலியுறுத்தினார். மேலும் "ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தையும், நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள், கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்." 

காஸ்டல் கந்தோல்போவில் தங்கியிருந்ததைப் பற்றிப் திருத்தந்தை பேசும்போது  “அது மிகவும் நன்றாக நடந்தது” எனக் கூறினார். “நல்ல ஒரு மாற்றத்தை அனுபவிக்க முடிந்தது” என்றும், ஆனால் அது “தனது பணியிலிருந்து விடுமுறை கிடைத்தது என்பதல்ல; அன்றாடம் நடக்கும நிகழ்வுகளை, செயல்பாடுகளை அறிந்து அவற்றை தான்  பின் தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். " திருஅவையின் குரல் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது, இறைவனுக்கு  நன்றி "என்று திருத்தந்தை லியோ கூறினார்.

“அமைதியை மேம்படுத்த நாம் தொடர்ந்து உழைப்போம்".