குடும்ப வாழ்வின் சாட்சியம் தேவை - வத்திக்கான் குடும்ப விழாவில் திருத்தந்தை | Veritas Tamil

திருத்தந்தை வத்திக்கான் குடும்ப விழாவில்: ‘உங்கள் சாட்சியம் தேவை’

திருத்தந்தை லியோ XIV சனிக்கிழமை மாலை வத்திக்கான் தோட்டத்தில் நடைபெற்ற வருடாந்திர குடும்ப விழாவில் வத்திக்கான் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வாழ்த்தி “குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சியையும், ஒன்றுபட்டு இருப்பதன் மகிழ்ச்சியையும் நாம் கொண்டாடுகிறோம்” என்று கூறினார்.


இந்த நிகழ்வில் சோப்பு குமிழ்கள், கோமாளி வித்தைகள், ஊதப்பட்ட சறுக்குகள், உணவு கடைகள், வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுவதற்கான இடங்கள், விளையாட்டுகள் மற்றும் நேரடி இசை ஆகியவை இடம்பெற்றன. ஆனால் பல குழந்தைகளின் மிகப்பெரிய ஈர்ப்பு திருத்தந்தைதான். அவர் சனிக்கிழமை மாலை செப்டம்பர் 6 அன்று, ஆளுநர் மாளிகைக்கு முன்னால் உள்ள திடலில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான வத்திக்கான் நகர ஊழியர்களின் குடும்பங்களை வாழ்த்துவதற்காக குடும்ப விழாவிற்கு வந்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வு, பல ஆண்டுகளாக மிகவும் மாறுபட்டதாகவும் வண்ணமயமாகவும் மாறியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த விழாஇ செப்டம்பர் மாத தொடக்கத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்காக நூற்றுக்கணக்கான தாய்மார்களும் தந்தையர்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர் - அவர்களில் பெரும்பாலானோர் கடந்த கோடையில் வத்திக்கான் கோடை மையத்தில் கலந்துகொண்டவர்கள். திருத்தந்தை லியோவின் வருகையால் இந்த நிகழ்வு உண்மையிலேயே ஒரு கொண்டாட்டமாக மாறியது. இயக்குநர் மற்றும் மத்திய அலுவலகங்களின் தலைமைக் குருக்களின் ஒருங்கிணைப்பாளரான சலேசிய சபை அருட்தந்தை ஃபிராங்கோ ஃபோன்டானா சைகை  செய்தபின், ஆளுநர் மாளிகையின் முதன்மை வாயிலிலிருந்து வெளியே வந்த திருத்தந்தையை மைக்ரோஃபோனை எடுத்துஇ வாழ்த்துக்கள், கைதட்டல்கள் மற்றும் பாடல்களுடன் அவரை வரவேற்ற பல குழந்தைகளை வாழ்த்தினார்.

'நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தை உருவாக்குகிறோம்'

அனைவருக்கும் மாலை வணக்கம்! இந்த குடும்ப விழாவில் ஒன்றாக இருப்பது எவ்வளவு அற்புதம்! உங்கள் குழந்தைகளை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது: உங்கள் அனைவருக்கும் ஒரு கைதட்டல்!” என்று திருத்தந்தை தனது உரையைத் தொடங்கினார். “உங்கள் அம்மாவும் அப்பாவும் உங்களை நேசிப்பது போலவே, நாமும் இப்படி ஒன்றாகக் கூடும்போது, நாம் உண்மையிலேயே ஒருவரையொருவர் நேசிக்கிறோம். ஏனென்றால் நாம் அனைவரும் நம் சகோதரன், நம் சிறந்த நண்பர் இயேசுவுடன் கடவுளின் குடும்பத்தை உருவாக்குகிறோம்” என்று கூட்டத்தில் இருந்த இளம் வயதினர்கள், குழந்தைகள் மற்றும் சில கைக்குழந்தைகளைப் பார்த்து புன்னகைத்தபடி திருத்தந்தை லியோ கூறினார்.

“திறந்த இதயத்துடன், இந்த அழகான தருணத்தை நாம் வாழ விரும்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார். “குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சி, ஒன்றுபட்டு இருப்பதன் மகிழ்ச்சி, ஒருவரோடு ஒருவர் நண்பர்களாக மாறுவதன் மகிழ்ச்சி, வாழ்வை கொண்டாடுதல் - குறிப்பாக குடும்ப வாழ்வு என்பது கடவுள் நமக்கு அளித்த பரிசு” என வலியுறுத்தினார்.

 “குடும்பங்களின் இந்த சாட்சியம் இன்றைய உலகில் மிகவும் முக்கியமானது!” என்று அவர் உறுதிப்படுத்தினார். “இந்த சாட்சியத்திற்காகவும், இன்று இரவு உங்கள் வருகைக்காகவும், குடும்பமாக ஒற்றுமையாக வாழ்வதற்கும் - சில சமயங்களில் பெரும் தியாகத்துடன் - இந்த செய்தியை வழங்குவதற்கும், இதனால் இயேசு கிறிஸ்து நமக்கு விட்டுச் சென்ற ஆவியைப் பகிர்ந்து கொள்வதற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.”

திருத்தந்தை லியோவுக்கு ஒரு பிட்சா (A pizza for Pope Leo )

ஜெபம் மற்றும் பிரியாவிடை

அதன்பிறகு, திருத்தந்தை அங்கு கூடியிருந்த அனைவரோடும் அருள் நிறைந்த  மரியே வாழ்க  என்னும் மங்கள வார்த்தை ஜெபத்தை செபிப்பதில் சேர்ந்து கொண்டார். பின்னர் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரு சிறப்பு ஆசீர்வாதத்தை வழங்கினார். திருத்தந்தையின் அருகில் ஆளுநர் சகோதரி ரஃபேலா பெட்ரினி, இரண்டு பொதுச் செயலாளர்களான பேராயர் எமிலியோ நாப்பா மற்றும் குசெப்பே புகிளிசி-அலிப்ராண்டி ஆகியோர் நின்றிருந்தனர். அவருக்குப் பின்னால் மூன்று கர்தினால்கள் இருந்தனர். அவர்களை திருத்தந்தை இவர்கள் அனைவரும் “ஒரு சிறப்பு கொடை ” என்று அழைத்தார்: அதாவது இரண்டு ஓய்வு பெற்ற தலைவர்களான ஃபெர்னாண்டோ வெர்கெஸ் அல்கா மற்றும் குசெப்பே பெர்டெல்லோ, அத்துடன் ஆயர்களின் சினோட் ஓய்வு பெற்ற செயலாளரான கர்தினால் லோரென்சோ பால்டிசெரி.

தனது உரை முடிந்ததும், திருத்தந்தை லியோ சுமார் ஒரு மணி நேரம் குழந்தைகளுடன் மற்றும் பெற்றோருடன் இணைந்து, அரங்கம் முழுவதும் வலம் வந்து குழந்தைகளை அரவணைத்தல்  ஆசீர்வாதித்தல் கைக்குலுக்கல், புகைப்படங்கள் எடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார் - “திருத்தந்தை லியோ XIV வாழ்க” என்று மொசரெல்லா சீஸால் எழுதப்பட்ட மார்கரிட்டா பிட்சாவை பரிசாகப் பெற்றார். பின்னர் அவர் பொழுதுபோக்கு கலைஞர்கள் மற்றும் கோமாளி வித்தை செய்பவர்களுடன் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் தனது இல்லத்திற்குத் திரும்பினார்.