2026 உலக அமைதி தினத்திற்கான கருப்பொருள் | Veritas Tamil

'உங்கள் அனைவருக்கும் அமைதி நிலவட்டும்'

2026 உலக அமைதி தினத்திற்கான கருப்பொருளான "உங்கள் அனைவருக்கும் அமைதி நிலவட்டும்: 'ஆயுதமில்லா மற்றும் ஆயுதக் களைவின்  அமைதியை நோக்கி" என்ற தலைப்பை திருத்தந்தை லியோ XIV வெளியிடுகிறார். அதே நேரத்தில் வத்திக்கான் பதிப்பகம் அமைதி இருக்கட்டும்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறது.

 

2026 உலக அமைதி தினத்திற்கான திருத்தந்தை லியோ XIV அவர்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு பற்றிய விவரங்களை  செவ்வாய் கிழமை அன்று ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்துறை வெளியிட்டது.

"உங்கள் அனைவருக்கும் அமைதி நிலவட்டும்: 'ஆயுதமில்லா மற்றும் ஆயுதக் களைவின்  அமைதியை நோக்கி" என்பது ஜனவரி 1 ஆம் தேதி, இறைவனின்  தாயான மரியாளின்  பெருவிழா அன்று நடைபெறும் உலக அமைதி தினத்திற்கான  மையப்பொருளாகும். .

"வன்முறை மற்றும் போரின் வீரியத்தை நிராகரித்து, அன்பு மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மையான அமைதியை ஏற்க  மனிதகுலத்தை அழைக்கிறது" என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 8, 2025 அன்று திருத்தந்தையாக  தேர்ந்தெடுக்கப்பட்ட மாலையிலும், அதன் பின் நடைபெற்ற எல்லா நிகழ்களிலும்   உலகிற்கு அவர் எதிர்பார்க்கும் அமைதியின் வகையை வகைப்படுத்த, ஆயுதமில்லா மற்றும் ஆயுதக் களைவின்  அமைதியை நோக்கி"  என்றசொற்றொடருடன் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தார்.

 

"இந்த அமைதி, ஆயுதமில்லாததாக இருக்க வேண்டும், அதாவது பயம், அச்சுறுத்தல்கள் அல்லது ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது" என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. "மேலும் அது ஆயுதக் களைவாகவும்  இருக்க வேண்டும். மோதல்களைத் தீர்க்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். அது மனதை கவரும் வகையிலேயும், மோதல்களை தீர்க்கக் கூடியதும், இதயங்களை திறக்கும் வகையிலும், பரஸ்பர நம்பிக்கை, அனுதாபம் மற்றும் நம்பிக்கையை உருவாக்கக் கூடியதாகவே இருக்க வேண்டும்.”

 "ஒவ்வொரு வகையான வன்முறையையும் நிராகரிக்கும் ஒரு வாழ்க்கை முறையில் நாம் அதை உள்ளடக்க வேண்டும். அது காணக்கூடியதாக இருந்தாலும் சரி அல்லது முறையானதாக இருந்தாலும் சரி."

மத சார்பு அல்லது சமூகத்தில் நமது பங்கு எதுவாக இருந்தாலும், அனைத்து மனிதகுலமும் அமைதியைத் தேட வேண்டும் என்ற உலகளாவிய அழைப்பை செய்திக்குறிப்பு சுட்டிக்காட்டியது.

"உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வாழ்த்து செய்தி"  'உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்' (யோவான் 20:19), நம்பிக்கையாளர்கள்,  நம்பிக்கை அற்றவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் குடிமக்கள் என அனைவருக்கும் கடவுளின் ராஜ்யத்தைக் கட்டியெழுப்பவும், மனிதாபிமான மற்றும் அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்படவும் அழைப்பு விடுக்கப்படுகிறது" என்று அறிக்கையில் கூறப்பட்டது.

திருத்தந்தையின் முதல் உரைகளின் புதிய புத்தகம்

தனித்தனியாக, வத்திக்கான் பதிப்பகம்(LEV) திருத்தந்தை லியோ XIV அவர்களின் முதல் பொது உரைகளை, அதன் வலுவான அமைதி தொனியுடன் சேகரிக்கும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டது.

அமைதி நிலவட்டும்! திருஅவைக்கும் உலகிற்குமான வார்த்தைகள்’ என்ற இந்தப் புத்தகம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆங்கிலம், இத்தாலி மற்றும் ஸ்பேனிஷ் மொழிகளில் புத்தகக் கடைகளில் வெளியாகிறது.”

"ஆயுதமில்லா மற்றும் ஆயுதக் களைவு" என்ற இருசொல்லை திருத்தந்தை பயன்படுத்தியதை நினைவு கூர்ந்த ஒரு செய்திக்குறிப்பு, இது முதலில் பிரெஞ்சு துறவி சார்லஸ்-மேரி கிறிஸ்டியன் டி செர்கே,  O.C.S.O.ஆல் எழுதப்பட்டது என்பதைக் குறிப்பிட்டது.

திபிரினில் உள்ள அட்லஸ் அன்னை மடத்தின் மடாதிபதி 1996 ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் உள்ள சிஸ்டெர்சியன் மடத்தில் தனது ஆறு சகோதரர் துறவிகளுடன் தியாகியானார்.

அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரேவோஸ்ட் மே 8 ஆம் தேதி அல்ஜீரியாவின் தியாகிகளின் வழிபாட்டு நினைவு நாளான அன்று தான் திருத்தந்தை லியோ XIV திருத்தந்தையாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புத்தகத்தின் உள்ளடக்கங்களைச் சுருக்கமாகக் கூறும் அந்த அறிக்கையில், திருத்தந்தை லியோ தனது பல முன்னுரிமைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் "இறைவனே அனைத்திற்கும் முதன்மை, திருஅவையின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான தேடல்" ஆகியவை அடங்கும்.

"சமரசத்திற்கான அவரது எண்ணற்ற வேண்டுகோள்கள் அரசியலுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நபரின் இதயத்திற்கும் அனுப்பப்படுகின்றன" என்று திருத்தந்தை கூறியதை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை வாசிக்கப்பட்டது: "அமைதி நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்குகிறது: நாம் மற்றவர்களைப் பார்க்கும் விதத்தில், மற்றவர்களைக் கேட்கும் விதத்தில் மற்றும் மற்றவர்களைப் பற்றிப் பேசும் விதத்தில்."