படைப்பின் நாளை கொண்டாட அழைக்கிறார் - திருத்தந்தை. | Veritas Tamil

செப்டம்பர் 1 அன்று கிறித்தவர்களை "ஒன்றிணைந்து படைப்பின் நாளை கொண்டாட அழைக்கிறார்" - திருத்தந்தை.

செப்டம்பர் 1 அன்று, உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் படைப்பின் ரகசியத்தை கொண்டாடும் வருடாந்திர நிகழ்வான படைப்பு தினத்தை வலிறுத்தினார். திருத்தந்தை லியோ  ஞாயிற்றுக்கிழமை நடந்த மூவேளை செபத்தின் போது, திருத்தந்தை பிரான்சிஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்கர்களுக்கு இந்த கொண்டாட்டத்தை விரிவுபடுத்தியதை நினைவு கூர்ந்தார். படைப்பிற்கான செபம் " முன்பு இருந்ததை  விட மிகவும் அவசரமானது மற்றும் முக்கியமானது" 

"எல்லா கிறித்தவர்களுடனும் சேர்ந்து, நாம் அதைக் கொண்டாடுகிறோம். மேலும் அக்டோபர் 4 ஆம் தேதி, புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருநாள் வரை இந்த படைப்பிற்கான காலத்தை நீட்டிக்கிறோம்" என்று அவர் கூறினார். "800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சகோதர சூரியனின் கீதத்தின் உணர்வில், நாம் கடவுளைப் புகழ்வோம். மேலும் இயற்கை என்னும் அவருடைய பரிசை பாழாக்காமல், நமது பொதுவான வீட்டைக் கவனித்துக் கொள்ள நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்."

படைப்பு தினம் நீண்டகால பாரம்பரியம்.
படைப்பு தினம், படைப்பிற்கான உலக செப தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 1989 இல் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் அழைப்பைத் தொடர்ந்து பெரும்பாலான கிறித்தவ திருச்சபைகளால் கொண்டாடப்படுகிறது.

5 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழமையான ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு மரபின் அடிப்படையில், இது கடவுளைப் படைப்பாளராகப் புகழ்வதற்கும், கிறிஸ்துவில் படைப்பின் ரகசியத்தை நினைவுகூருவதற்கும், மேலும் படைக்கப்பட்ட உலகத்தைக் கவனித்துக்கொள்ள கிறித்தவர்களுக்கு ஊக்கமளிப்பதற்குமான ஒரு நாள்.

ஆர்த்தடாக்ஸ் மற்றும் புராட்டஸ்டன்ட் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் கிறிஸ்தவ சபைகளின் உலகஆலோசனை குழு இந்த நாளின் வரலாறு மற்றும் குறியீட்டு முறையைப் பற்றி ஒரு புதிய காணொளியை வெளியிட்டது.

பல கத்தோலிக்க ஆயர் மாநாடுகள் 1990களில் இருந்து படைப்பு தினத்தை கொண்டாடி வந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் 2015 இல் உலகளாவிய கத்தோலிக்க திருச்சபைக்கான உலகப் பிரார்த்தனை தினமாக இதை நிறுவினார்.

'அமைதி மற்றும் நம்பிக்கையின் விதைகள்'
திருத்தந்தை லியோ  இந்த ஆண்டு, தனது முன்னோடியான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து படைப்பு தினத்திற்கான சிறப்பு செய்தியை வெளியிட்டார்.

"நமது அன்பான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, படைப்பின் பராமரிப்புக்கான இந்த உலகப் பிரார்த்தனை தினத்தின் கருப்பொருள் 'அமைதி மற்றும் நம்பிக்கையின் விதைகள்' ஆகும்" என்று அவர் கூறினார். "இந்த பிரார்த்தனை தினம் நிறுவப்பட்ட பத்தாவது ஆண்டு நிறைவில், புகழனைத்தும் உமதே! (Laudato Si’) என்னும் ஆவணம்  வெளியிடப்பட்டு ' நம்பிக்கையின் திருப்பயணிகளாக' என்று இந்த தற்போதைய யூபிலியை நாம் கொண்டாடுகிறோம்."

"விசுவாசிகளுக்கு, சுற்றுச்சூழல் நீதி என்பது விசுவாசத்திலிருந்து பிறந்த ஒரு கடமையாகும், ஏனெனில் பிரபஞ்சம் இயேசு கிறிஸ்துவின் முகத்தை பிரதிபலிக்கிறது. அதிலிந்துதான்  எல்லாமே உருவாக்கப்பட்டு மீட்கப்பட்டன" என்று கூறினார்.

மேலும், திருத்தந்தை லியோ சமீபத்தில் புதிய "படைப்பின் பராமரிப்புக்கான திருப்பலி" வழிபாட்டு முறைகளின் தொகுப்பை வெளியிட்டார். இது“புதிய திருப்பலி வழிமுறை உருவாக்கம், கத்தோலிக்க சமூகங்களுக்கு முதன்முறையாக, பாரம்பரிய மதஒற்றுமை பிரார்த்தனைச் சடங்குகளைத் தாண்டி, வழிபாட்டு முறையில் ‘படைப்புத் தினத்தை’ கொண்டாடும் வாய்ப்பை அளிக்கிறது.”