“நேரம் என்பது நொடிகளில் கடப்பது அல்ல" | அருட்பணி. நா பார்த்தசாரதி சே.ச. | Veritas Tamil

30 நொடிகள்

“நேரம் என்பது நொடிகளில் கடப்பது அல்ல"
அந்த நேரத்தில் என்ன உணர்ந்தோம், என்ன சாதித்தோம் என்பதே!”
உலகில் அதிகம் கனவுகளைச் சுமந்து வாழ்வை நகர்த்தும் கூட்டம் இளைஞர்கள் கூட்டமாகத் தான் உள்ளது. இவர்களின் இமைக்கா நொடிகள் இதயங்களையும்இ இமயங்களையும் நோக்கிய வண்ணமாக உள்ளன. மாற்றங்கள் விரும்பும் உலகில் மாற்றத்தின் துளிர்கள் இளைஞர்களே என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை. என்னத்தான் வாழ்க்கை அழுத்தத்தைக் கொடுத்தாலும் அடுத்த நொடியே விடியலைத் தேடி ஓட தொடங்கிவிடுகின்றனர் இளைஞர்கள். இத்தகைய இளைஞர்கள் வாழ்வில் ஓர் இடியாக இன்றைய சமூக ஊடகங்கள் வாழ்வியலை மாற்றி வருகின்றன. எதிலும் முழுமையானக் கவனம் அதிகம் வருவதில்லை.


அனைத்தும் கடந்தும் போகும் என்ற நேர்மறை எண்ணத்தைத் தவிர்த்து அனைத்தையும் கடந்து எதிலும் ஆழுமும், அழுத்தமும் பெறாமல் வாழும் வாழ்க்கை இறுதியில் விரகத்தியில் முடிவடைகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று இளைஞர்களோடு பொழுதுப் போக்காகக் கேட்ட போது. அவர்களின் விடை என் விழிகளைப் பிதுக்கியது. வாழ்க்கையில்

                     ‘அனைத்தும் 30 நொடிகள் மட்டுமே’.


அனைத்தும் 30 நொடிகள் அதுவே இன்று அதிகமாக உள்ளது. இன்றைய நம் இளம் தோழர்கள் அனைத்தையும் 30 நொடிகளுக்குள் நிறைவுக்கான விரும்புகின்றனர். பெரியவர்கள் 30 நொடிகளுக்கு மேலாகப் பேசினால் ‘அறுவை’ என்கிறார்கள். காணொளிகள் 30 நொடிகளுக்கு மேலாக இருந்தால் அது ‘மொக்கை காணொளி’ என்கிறார்கள். வகுப்புகள் 30 நிமிடங்களுக்கு மேல் போனால் ‘போதும்’ என்கிறார்கள். எந்தக் கூட்டமாக இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு மேல் சென்றால் நம் கைகள் அலைப்பேசியைத் தேடி அலைப்பாய்கிறது. அவசியமில்லை என்றாலும் அவசியமற்றவைகளை அவசியமின்றி காலத்தைக் கடத்தும் கருவியாகப் பயன்படுத்துகிறோம். பொழுதுப் போகவில்லை எனவே பொழுதைப் போக்குகிறோம் என நினைக்கிறோம். ஆனால் காலம் நம்மையும் நம் கனவுகளையும் விட்டுக் கடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை உணர மறுக்கிறோம்இ மறக்கிறோம். விளைவு வாழ்க்கையிலும் நாட்டமில்லைஇ சமூகத்திலும் பொறுப்பில்லைஇ நாட்டிற்கும்இ உலகிற்கும் அடையாளமின்றி கடந்துச் செல்கிறோம்.


இத்தகைய மனநிலை மாறிட 30 நிமிடங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திட விபத்திலிருந்து தப்பிய நபரிடமும்இ தடகள வீரர்களிடமும் நாம் கேட்டும் பார்த்தும் அறிந்துக் கொள்ள வேண்டும்இ உணர்ந்திட வேண்டும். தோழர்களே! இலக்கு தெளிவு இல்லா வாழ்க்கை இருந்தும் பயனற்ற வாழ்க்கை. அமைதி என்னும் நண்பரை யாருக்கும் குறிப்பாக பெருவாரியான மக்களுக்கு பிடிப்பதில்லை. தனிமையில் சில மணித்துளிகள் என்பது ஆழ்கடலில் அரிதாகக் கிடைக்கும் முத்திற்கு சமமாகும். அதை கடினப்பட்டு எடுத்திட அல்லது வாழ்ந்திட முடியாமல் இளைஞர்கள் திணறுகின்றனர்.


சில வழிகள்:

  •  ஓவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் 5 நிமிடங்கள் அமைதியில் இருக்கப் பழகுங்கள். கவனம் முழுவதும் உங்களை ரீங்காரமிட வேண்டும். எந்தப் பணியைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம்.
  •  உங்களில் எழும் உங்களைப் பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களை முற்சார்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  •  நேர்மறை எண்ணங்களை எந்தவித அழுத்தமின்றி அன்றாடம் கவனமுடன் வளர்த்துக் கொள்ளுதலும்இ எதிர்மறை எண்ணங்களை ஏற்று இனி அவற்றை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அலைப் பேசியில் அன்பைத் தேடுவதைத் தவிர்த்துவிட்டு, அடுத்தவரோடு நேரம் செலவழித்து அன்போடு வாழப் பழகுங்கள்.

உறுதியாகச் சொல்லுகிறோம் நம் வாழ்வு வளமாகும். அடுத்தவருக்கு நாம் வரமாவோம்!


“ மீதம் எவ்வளவு உள்ளது என்பது தெரியாமலே, நாம் செலவு செய்வது தான் காலம்”.


எழுத்து
அருட்பணி. நா பார்த்தசாரதி சே.ச, சென்னை