றிஸ்மஸ் என்பதே அன்பின் விழாதான். கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பின் சாட்சிதான் பிறந்த குழந்தை இயேசு. நம்மிடமுள்ள அன்பை நாம் எவ்வாறு மெய்ப்பிக்கப் போகிறோம்.
வீடுகள், பள்ளிகள் மற்றும் பங்குகளில் அமைக்கப்படும் பிறப்புக் காட்சிகளின் முன் சிந்திக்குமாறு இளைஞர்களை அழைத்த திருத்தந்தை, கிறிஸ்துவைச் சுற்றி அனைவருக்கும் இடம் இருப்பதை அவை வெளிப்படுத்துகின்றன என்றார்.