பொதுக்காலம் 15ம் வார புதன்கிழமை | தினசரி மறைசாற்று | அருட்பணி மோசஸ் ராஜா MMI | Veritas Tamil

பொதுக்காலம் 15ம் வார புதன்கிழமை

 

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும்

மறைத்துக் குழந்தைகளுக்கு

வெளிப்படுத்தினீர்.

- மத்தேயு 11: 25-27

 

வேகமாக ஓடுகின்ற உலகில்

மோகமாக எல்லாமான நிலையில்

'நிதானம்' எட்டா வானமே!

 

உடனே உயர வேண்டுமென...

உதாசீனம் மற்றதெல்லாம்!

உண்மையான பொக்கிசமோ

உடனுக்குடன் கிடைப்பதில்லை!

ஞானமும் அப்படித்தான்

காலமும் காத்திருக்க வேண்டும்!

 

அது எளிதில் வெளிப்படுவது அல்ல!

வேர்களின் வியர்வை தான்

கனிகளுக்கான உயர்வைத் தரும்! முத்தும் - பவளமும்; பொன்னும் - புதையலும்

மறைக்கப்பட்ட மகத்துவங்களே!

 

அப்பா பார்த்துக் கொள்வாரென

குழந்தை நம்புதல் போல்...

கடவுளை நம்புதலே பொக்கிசங்களின் திறவுகோல்!