கள்ளமற்ற வெள்ளை உள்ளம் விண்ணரசை உரிமையாக்கும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

16 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 19 ஆம் வாரம் – சனி
யோசுவா 24: 14-29
மத்தேயு 19: 13-15
கள்ளமற்ற வெள்ளை உள்ளம் விண்ணரசை உரிமையாக்கும்!
முதல் வாசகம்.
யோசுவா இஸ்ரயேலர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் அழைத்துச் சென்று, ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் வழங்கப்பட்ட நாடு முழுவதும் அவர்களை நிலைநிறுத்த உதவினார்.ர். கடவுளுக்கும் மக்களுக்கும் சேவை செய்த தனது வாழ்க்கையின் முடிவில், யோசுவா மக்களிடம், அவர்களைக் காப்பாற்றிய ஆண்டவராகிய கடவுளுக்கு, அவர்கள் தொடர்ந்து பணிவார்களா? அந்த ஒரே கடவுளை மட்டும் வழிபடுவார்களாக அல்லது அங்குள்ள பழங்குடி மக்களால், அல்லது எகிப்தியர்களால் அல்லது ஆபிரகாமின் மூதாதையர்களால் வணங்கப்படும் ஏராளமான தெய்வங்களால் மட்டில் தங்கள் இதயங்களைத் திருப்புவார்களா என்று கேட்கிறார்.
கடவுள் தங்களுக்குச் செய்ததை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் ஆண்டவருக்கே சேவை செய்வார்கள் என்று கூறுகிறார்கள். கடவுள் முழுமையான நம்பகத்தன்மையைக் கோருவதால் கடவுளுக்கு சேவை செய்வது எளிதானது அல்ல என்பதை யோசுவா ஒப்புக்கொள்கிறார், ஆனால் ஆண்டவருக்கு சேவை செய்வதன் வெகுமதிகள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உடைமையாகக் கொண்டதாகும் என்று ஊக்கமூட்டுகிறார். பிறகு வயதான காலத்தில் இறக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், சீடர்கள் குழந்தைகளைத் தள்ளி வைக்க முயன்ற போதிலும், இயேசு தம்மிடம் வரும் குழந்தைகளை வரவேற்கிறார். சமூகத்தில் அதிகாரமற்றவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் காணப்பட்ட குழந்தைகளை இயேசு அன்புடன் வரவேற்கிறார்.
குழந்தைகளிடம் பெரும்பாலும் காணப்படும் குணங்களான எளிமை, பணிவு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை கடவுளுடைய அரசில் ஒரு பகுதியாக இருப்பதற்கு இன்றியமையாதவை என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.
சிந்தனைக்கு.
வழக்கமாக சிறு பிள்ளைகளை நாம்’ அது’ என்றுதான் சொல்வோம். அது யார் குழந்தை? அல்லது இது உங்கள் குழந்தையா? என்றுதான் குறுப்பிடுவோம். ‘அது’ என்பது அஃறிணைக்கு உரியது. மனிதர்களுக்கு’அது’ என்பது பயன்படுத்தப்படாது. குழந்தைகள் கள்ளம் கபடற்றவர்கள். அவர்கள் உள்ளத்தில் சூதுவாது இருக்காது. வெளுத்ததெல்லம் பால் என்று நினைப்பவர்கள். அவ்வாறே பெரியோரும் சூதுவாதற்ற வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம்.
முதல் வாசகத்தில் யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், சிறுவர்களுக்குப் போதிப்பதுபோல் அவர்களை மீட்டு வந்ந கடவுளுக்குத் தூய மனதுடன் பணியுமாறு பணிக்கிறார்.
விவிலியப் பின்னிணியில் பார்ப்போமானால், சிறு குழந்தைகள் என்பவர்கள் இஸ்ரயேலைப் பொறுத்தவரையில் எண்ணிக்கைக்குள் வராதவர்கள். எண்ணிக்கை நூலில் கணக்கெடுப்பில் இவர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு முக்கியதுதவம் கொடுக்கப்படவில்லை. இதன் பினபுலத்தில்தான் சீடர்கள் சிறுவருகள் இயேசுவிடம் வருவதைத் தடுக்கிறார்கள். இயேசுவோ அத கூடாதென்கிறார். அத்துடன் அவர்களை மையப்படுத்தி, விண்ணரசின் முதல் உரிமையாளர்கள் அவர்களே என்கிறார். இது முற்றிலும் மாறுபட்ட போதனையாக சீடர்களுக்குப்பட்டது.
அன்பை அதன் தூய்மையான வடிவத்தில் புரிந்துகொள்ளும் திறன் சிறு குழந்தைகளுக்கு இல்லை. ஆனால் குழந்தைகள், ஏன் கைக்குழந்தைகள் கூட, நம் அன்பைப் பெறும் திறன் கொண்டவர்கள், இந்தப் கொடையை அவர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும் கூட அவர்கள் வெள்ளை மனம் கொண்டர்கள். இதை மனதில்கொண்டு கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில்,
என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி என்று குறிப்பிடுவார். ஆம், பிள்ளைகள் கள்ளமற்ற வெள்ளை மொழி கொண்டவர்கள்.
பொதுவாக, குழந்தைகள் தீமையை அறியாதவர்கள். தீமைக்குத் தீமை செய்ய அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குக் காமவெறி அல்லது விபச்சாரம் செய்யவோ, கொள்ளையடிக்கவோ தெரியாது. அவர்கள் கேட்பதை நம்புகிறவர்கள். அவர்கள் தங்கள் பெற்றோரை முழு பாசத்துடன் அன்பு செயவார்கள். ஆகையால், அன்பானவர்களே நாம் அனைவரும் கடவுளுக்குப் பயப்படுவதாலும், தூய வாழ்க்கை முறையாலும், விணணரசின் அன்பாலும் மாற வேண்டும் என்று ஆண்டவர் நமக்கு அறிவுறுத்துகிறார் - ஏனென்றால் நாம் குழந்தைகளைப் போலவே எல்லா பாவங்களிலிருந்தும் விலகி நிற்க வேண்டும்.
தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் அழைத்து வந்த பெற்றோர், இயேசு அவர்கள் மீது கைகளை வைக்க வேண்டும் என்று விரும்பினர் என்று மத்தேயு குறிப்பிட்டுள்ளார். இயேசுவின் தொடுதலால் ஏற்படும் உடல் மற்றும் ஆன்மீக குணப்படுத்தும் சக்தியை அவர்கள் அறிந்திருந்தனர். குழந்தைகள் வருவதைத் தடுத்ததற்காக இயேசு தம் சீடர்களைக் கண்டித்தார். சத்தமிடும் குழந்தைகளின் தொல்லையிலிருந்து இயேசுவைப் பாதுகாக்க சீடர்கள் விரும்பியிருக்கலாம். ஆனால் இயேசு குழந்தைகளில் மகிழ்ச்சியடைந்தார், இதனிமித்தமே, திருஅவை சிறுவர்களுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிலேயே’நற்குணை வழங்குகறது என்பதை நினைவில் கொள்வோம்.
நிறைவாக, பெற்றோர் பிள்ளைகளை ஆலயத்திற்கு அனுப்பவதில் அல்ல, நற்செய்தியில் கண்டவாறு, அவர்களை ஆலயத்திறகு உடன் அழைத்து வருவதில் அக்க்றைகாட்ட வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, இன்றும் என்றும் உமது அன்பான உடனிருப்பில் நான் எளிமையையும் பணிவையும் ஒருபோதும் இழக்காமல் இருக்க என்னை ஆசீர்வதியும் ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
