வெளிவேடம் விரைவில் வெளிப்படும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

25 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 21ஆம் வாரம் – திங்கள்

1 தெசலோனிக்கர் 1-5, 8-10 
மத்தேயு 23: 13-22
 
 
 வெளிவேடம் விரைவில் வெளிப்படும்!

 முதல் வாசகம்.

இன்றைய வாசகங்கள் உண்மையுள்ள விசுவாசிகளுக்கும் போலி மதவாதிகளுக்கும் இடையிலான கூர்மையான வேறுபாட்டை விவரிக்கின்றன.  தெசலோனிகாவில் உள்ள விசுவாசிகளுக்கு எழுதிய திருமுகத்தின் அறிமுகத்தில், புனித பவுல் அவர்களின் நம்பிக்கை, அன்பு மற்றும் எதிர்நோக்கைப் பாராட்டுகிறார்.

கி.பி 51 ஆம் ஆண்டில், புனித பவுல் தெசலோனிக்கேயரின் கிறிஸ்தவச் சமூகத்திற்கு ஒரு வருடம் அல்லது அதற்கு முன்பு தான் கண்டுபிடித்ததற்கு உதவிய தனது கடிதத்தை எழுதுகிறார். இக்கடிதத்தில்தான் முதல் முறையாக, எதிர்நோக்கு, நம்பிக்கை மற்றும் அன்பு ஆகிய மூன்று அம்சங்களையும் குறிப்பிட்டு எழுதுகிறார்.  

ஆம்,  புனித பவுல் தெசலோனிக்கத் திருஅவையார்க்குக் கடிதம் எழுதுகின்றபோது, அவர்களிடம் விளங்கிய மூன்று முக்கியமான பண்புகளுக்காக  இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக இன்றைய முதல் வாசகத்தில் கூறுகின்றார். செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை. அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு.  ஆண்டவர் இயேசு வருவார் என்று எதிர்நோக்கியிருப்பதால் கிடைக்கும் நம்பிக்கை. என்ற இந்த மூன்று பண்புகளும் தெசலோனிக்கத் திருஅவையாரிடம் நிறைவாக இருந்தன. அதற்காகத்தான் அவர் அவற்றை நினைத்து ஆண்டவர்க்கு நன்றி செலுத்தியதை இங்கு வாசித்தறிகிறோம்.

 நற்செய்தி.
 
நற்செய்தியில் இயேசு, ‘விண்ணகத்திற்கு வழி சொல்கின்றேன்’ என்று சொல்லிக்கொண்டு, மக்களுக்கு இடையூறாக இருக்கும் மறைநூல் அறிஞர்களையொட்டி பேசுகிறார்.  அவர்கள் விண்ணகம் செல்வதற்கு முக்கியமாக விளங்கும்  கடவுளின் திருச்சட்டத்தைப் போதிக்காமல், அவர்களின் சொந்த விருப்பத்திற்கு விளக்கமளிக்கும் திருச்சட்டங்களுக்கான போதனைகளைப் பின்பற்ற மக்க்ளை வலியுறுத்நி வருகிறார்கள்.    இத்தகையோரை இயேசு குருட்டு வழிகாட்டிகைள்  என்று விவரிக்கிறார்.
 
சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தியில், ஆண்டவராகிய இயேசு  மறைநூல் அறிஞர்களை “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை என்று நேரடியாகத் திட்டுகிறார். 

மறைநூல் அறிஞர்கள் மற்றும்  மற்றும் பரிசேயர்களைப் பற்றிய   "உங்களுக்கு ஐயோ கேடு..." எனும் அவரது கண்டனத்தை இன்று தொடங்குகிறார் இயேசு.  இன்றைய நற்செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டது  அவருடைய ஏழு ‘ஐயோ கேடு’ கண்டங்களில் முதலாவது கண்டனமாகும். ஆனாலும், அவர்கள் பிடிவாதமாக இருந்தனர், இயேசு சொன்னது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருந்தது.  

இயேசு,  குறிப்பாக வெளிவேடத்தைக் கண்டிக்கிறார். வெளிவேடம் என்பது அடிப்படையில் ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் செய்வதாகும்.    

மறைநூலில், மறைநூல் அறிஞர்களும் பரிசேயரும் மக்களை மீட்புக்கு வழிநடத்துவதாகக் கூறிக்கொண்டனர், உண்மைநில்  அவர்கள் இரட்சிப்பின் மூலமான இயேசுவையை கண்டனம் செய்தனர் என்பதை அறியாமல் இருந்தனர். ஒருபுறம், அவர்கள் கற்பித்தவற்றில் சில உண்மையாக இருந்தபோதிலும், அவர்கள் அவற்றை  கடவுளிடமிருந்து வரும் நல்லொழுக்கத்துடன் கற்பிக்கத் தவறிவிட்டனர். அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று அழைத்தது பொருத்தமானதாக இருந்தது. ஏனென்றால் அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் மாறுபட்டிருந்தன.  உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசித்தரிந்தனர். அவர்கள் வெள்ளையிடித்த கல்லறைகளாகவே தோன்றினர்.

முதல் வாசகத்தில், பவுல் அடிகள், தெசலோனிக்கர்கள் நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் அளவுக்கு வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் கேட்டறிந்த நற்செய்திக்கு முழுவதும் கீழ்ப்படிந்து நடந்தார்கள் என்றும் பவுல் பாராட்டுகிறார். ஆனால், நற்செய்தியிலோ, இயேசு திருச்சட்டத்தை தங்களுக்கு ஏற்றவாறு திரித்துக்கூறும் மறைநூல் அறிஞர்களை கண்டிக்கிறார்.

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலே அது உயிரற்றது (யாக் 2: 17) ஆகும். இன்று நமது நம்பிக்கைக்கும், வாழ்வுக்கும் தொடர்பு உண்டா?. இயேசு வெளிவேடக்காரர்களே என்று அழைக்கப்பட்டோர் பட்டிலில் நாமும் அடங்குகிறோமா? சிந்திப்போம்! 

இறைவேண்டல்.

என் மீட்பராகிய ஆண்டவரே,  உமது மீட்புக்கான நற்செய்தியின் ஆற்றல்மிகு கருவியாக நான் இருக்க என்னை ஆசீர்வதியும். ஆமென்


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452