பசுமையைப் பேணும் நாசரேத் திருக்குடும்ப சபை | Veritas Tamil

மரம் நடுவோம்... இயற்கையைக் காப்போம்: நாசரேத் திருக்குடும்ப அருட்சகோதரிகள் சபையின் பசுமை முயற்சி

மேற்கு இந்தியாவின் கோவாவில் செயல்பட்டு வரும் நாசரேத் திருக்குடும்ப அருட்சகோதரிகள் சபை, தனது 91ஆவது நிறுவல் நாளை முன்னிட்டு, ஜூன் 18 அன்று மரக்கன்று நடும் நிகழ்ச்சியை நடத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்தியாவின் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தேசிய மரக்கன்று நடும் விழாவையொட்டி, கோவாவின் சாங்கோலேயிலுள்ள ஹூஸ்டின்ட் பகுதியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு உலகளாவிய இயக்கமாக உருவாகும் முன்பே மரம் நடுவதையும் பசுமையை வளர்ப்பதையும் ஊக்குவித்த சபையின் நிறுவனர் அருட்தந்தை ஃபாஸ்டின்ஹோ டி சோசா அவர்களுக்கு இந்நிகழ்வின் மூலம் மரியாதை செலுத்தப்பட்டது.

அருட்தந்தை ஃபாஸ்டின்ஹோ டி சோசா அவர்கள் பணியாற்றிய எல்லா இடங்களிலும் மரம் நடுவதை ஊக்குவித்தார். குறிப்பாக, வடக்கு கோவாவின் மாபுசாவில் உள்ள டூலர் புனித பிரான்சிஸ் சவேரியார் சிற்றாலயத்தில் பணியாற்றியபோது, புதர்மண்டிக் கிடந்த சுற்றுப்புறத்தை இளைஞர்களின் உதவியுடன் சுத்தம் செய்து, அங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கச் செய்து, அந்தப் பகுதியை மக்களுக்குப் பயனுள்ள இடமாக மாற்றினார்.

கோவாவில் சாலை விரிவாக்கம், மேம்பாலக் கட்டுமானம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக மரங்கள் அகற்றப்படுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

அச்சபையின் தலைமை அன்னை அருட்சகோதரி பெர்னா ரோட்ரிக்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி எஸ்டெல்லா பெரேரா, மூத்த உறுப்பினர் அருட்சகோதரி நெவ்ஸ் அசவேடோ, புனித ஜோசப் வாஸ் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சியில் உள்ள அருட்சகோதரிகள் மற்றும் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை நட்டதுடன், அவற்றுக்கு நீர் ஊற்றி, எதிர்காலத்திலும் அவற்றைப் பராமரிப்பதாகப் பங்கேற்பாளர்கள் உறுதியளித்தனர்.

சபையின் நிறுவனரின் தொலைநோக்குப் பார்வையைப் போற்றுவதோடு, உள்ளூர் பகுதியில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும், பல்லுயிர் வளப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.