குடும்பங்களுக்கான யூபிலி கொண்டாட்டம். | Veritas Tamil

மியான்மர்: மண்டலே மறைமாவட்டத்தில் உள்ள பங்கில் குடும்பங்களுக்கான யூபிலி கொண்டாட்டம்.
ஜூலை 26, 2025 அன்று குடும்பங்களுக்கான யூபிலி மற்றும் தாத்தா பாட்டி மற்றும் முதியோருக்கான உலக தினத்தைக் கொண்டாட, மண்டலேயில் உள்ள சனயேதசான் டவுன்ஷிப்பில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில் இறைமக்கள் ஒன்றுகூடுகிறார்கள்.
மியான்மரின் மண்டலே மறைமாவட்டத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் ஜூலை 26 அன்று உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினத்துடன் இணைந்து குடும்பங்களுக்கான விழாவைக் கொண்டாடியது. இத்திருப்பலியை மண்டலேயின் பேராயர் மார்கோ தலைமை தாங்கினார் .
"நாம் எதிர்கொள்ளும் பல சவால்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கக்கூடாது" என்று பேராயர் மார்கோ தனது மறையுரையில் கூறினார். "நமது தாத்தா பாட்டி மற்றும் முதியவர்களுக்காக நாம் தொடர்ந்து ஜெபிக்கவும் அவர்களை ஆதரிக்கவும் வேண்டும்."
புனித கன்னி மரியாளின் பெற்றோரான புனித சுவக்கீன் மற்றும் அன்னாள் ஆகியோரின் முன்மாதிரியை அவர் விசுவாசிகளுக்கு நினைவூட்டினார். அனைவரும் முதியவர்களுக்கு மரியாதை, அக்கறை மற்றும் நன்றியுணர்வைக் காட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "அவர்களின் அன்பு, ஆதரவு மற்றும் தியாகங்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்." என்று பேராயர் கூறினார். "இன்று நாம் யாராக இருக்கிறோம் என்பது அவர்கள் நமக்குக் கொடுத்தவற்றின் காரணமாகும்."
தலைமுறை இடைவெளிகள் இருந்தபோதிலும், அறநெறி மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் ஆதாரங்களாகச் செயல்படும் தங்கள் பெரியவர்களின் ஞானத்தைக் கேட்குமாறு பேராயர் மார்கோ இளைஞர்களை ஊக்குவித்தார்.
இந்தக் கொண்டாட்டத்தை பொது மக்கள் மற்றும் குடும்பங்களுக்கான மறைமாவட்ட ஆணையம் ஏற்பாடு செய்தது.திருப்பலிக்கு முன்னதாக, சமூகத்தில் குடும்பங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து அருட்தந்தை பால் தேக் கைன் ஒரு உரை நிகழ்த்தினார்.
"நீங்கள் விதைத்ததைத் தான் அறுவடையாகப் பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் எதை விதைத்தீர்கள், எதை அறுவடையாகப் பெற விரும்புகிறீர்கள்?" என அவர் கேட்டார். "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்காத விளைவுகளை அறுவடை செய்ய நேரிடும்."
குழந்தைகளும் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியின் மனப்பான்மைகளைக் கவனிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் - குறிப்பாக அவர்களின் நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வு. "பெற்றோர்கள் பக்தியுள்ளவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் இருந்தால், குழந்தைகளும் அதே பாதையைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் வீட்டில் தெய்வீகத்தன்மை இல்லையென்றால், அதை மற்றவர்களுக்குக் கடத்துவது கடினமாகிவிடும்" என்று அவர் விளக்கினார்.
வயதான காலத்தில் பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்த அருட்தந்தை தேக் கைன், இளைஞர்களிடம்இ "நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். யாரும் தங்கள் பெற்றோரையோ அல்லது தாத்தா பாட்டியையோ அவமதிக்கக்கூடாது. அவர்களை அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
"உங்கள் வயதான பெற்றோருடன் இருப்பதால் நீங்கள் மெதுவாக நடக்கிறீர்கள் என்றால், வருத்தப்பட வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், அவர்கள்தான் உங்களுக்கு நடக்கக் கற்றுக் கொடுத்தார்கள். நீங்கள் உங்கள் முதல் அடிகளை எடுத்து வைக்கும் போது மகிழ்ச்சியில் கைதட்டினார்கள்" என்று அவர் இளைஞர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான நினைவூட்டலை வழங்கினார்.
குடும்ப வாழ்க்கையின் கண்ணியத்தையும்இ தலைமுறைகளுக்கு இடையேயான ஒற்றுமையையும் வலியுறுத்தி, அருட்தந்தை அகஸ்டின் டிம் மாங் துன் அவர்களும் கூட்டத்தில் உரையாற்றினார்.
Daily Program
