‘தனக்குக் குழந்தையில்லை... தனக்குப் பின் தன்னுடைய அடிமையின் மகன் எலியேசர்தான் உரிமை மகனாவான்’ என்று ஆபிரகாம் வருந்திக்கொண்டிருக்கிறபோது, ஆண்டவராகிய கடவுள் அவரிடம், “ஆபிராம்! அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்” என்கின்றார்.
ஆபிராம் (இது ஆபிரகாமின் முதல் பெயர்) தனது தாயகத்தை விட்டு (இன்றைய ஈராக்) வெளியேறி, கடவுள் அவருக்குக் காண்பிக்கும் ஒரு புதிய நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கடவுளின் அழைப்பைக் கேட்கிறார்.