நுகம் என்பது அவருடைய அன்பின் வழியை உணர்த்தும் சொல்லாக உள்ளது. ஆம், அவரது அன்பின் படிப்பினையை நாம் ஏற்று அதன்படி வாழ்வோமானால், அவரில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.
மனுக்குலத்திற்கு மீட்பைக் கொண்டுவர அவர் அனுப்பிய ஒரே மகனான இயேசுவை, சிலுவை மரணத்தைத் தவிர்த்து, வேறு பாதுகாப்பான வழியில் மீட்பு கொண்டு வர கடவுள் விரும்பியிருக்கலாம்.
புனித பவுலின் மனமாற்றம் அவருக்கு மட்டுமல்ல, திருஅவையின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில், புனித பவுலின் மனமாற்றத்திற்குப் பின்தான் இயேசுவின் நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
நாம் மறுமையில் நிலைவாழ்வுப் பெற்று என்றென்றும் கடவுளுடன் இருக்கும்போது நமது நிலை என்னவாக இருக்கும் என்பதை மண்ணகத்தில் முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ முடியாது.
இயேசு அவரைக் குணப்படுத்தினார். இயேசுவுக்கு எதிரான சதி வேலைத்தொடங்கியது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்
மத்தேயு இயேசுவைப் பின்செல்ல கடவுளின் அருளே காரணமாக இருந்திருக்க வேண்டும். இயேசுவின் வார்த்தை அவரது ஆன்மாவில் "சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தெளிவை" உருவாக்கி இருக்கக்கூடும்.
அவர், பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக அவர்களிடம் காட்டிக்கொண்டார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.
‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்பதைத் தெளிவுப்படுத்தி, இயேசுவை மணமகனாகவும், தன்னை மணமகனின் தோழனாகவும் தாழ்த்திக்கொள்கிறார்.