அல்ஜீரியக் குடியரசின் அதிபரை திருத்தந்தை லியோ XIV வரவேற்கிறார். | Veritas Tamil

அல்ஜீரியக் குடியரசின் அதிபரை திருத்தந்தை லியோ XIV வரவேற்கிறார்.


அல்ஜீரியா குடியரசின் தலைவர் திரு. அப்தெல்மக்ஜித் டெபவுனை வத்திக்கானில் திருத்தந்தை லியோ XIV சந்திக்கிறார். பின்னர் அவர் திருஅவையின் வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்தார்.

அல்ஜீரியக் குடியரசின் தலைவர் திரு. அப்தெல்மக்ஜித் டெப்பவுனை, வியாழக்கிழமை காலை வத்திக்கானில் திருத்தந்தை  லியோ XIV வரவேற்றார்.

திருஅவையின் பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனாதிபதி திருத்தந்தை லியோ XIV சந்திக்கிறார். பின்னர் திருஅவையின் வெளியுறவுச் செயலாளர் கர்தினல் பியட்ரோ பரோலினையும், வெளியுறவுச் செயலகத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவு பிரிவின் பலதரப்புத் துறைக்கான துணைச் செயலாளர் மான்சிக்னர் டேனியல் பச்சோவையும் சந்தித்தார்.

"வெளியுறவுச் செயலகத்தில் நடந்த சுமுகமான கலந்துரையாடல்களின் போது," "திருஅவைக்கும் அல்ஜீரியா குடியரசுக்கும் இடையிலான நல்ல தூதரக  உறவுகள் குறிப்பிடப்பட்டன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அல்ஜீரியா குடியரசின் அதிபரை வத்திக்கானில்  திருத்தந்தை  வரவேற்றார் அதன் பின் "நாட்டிலும் திருஅவையிலும் நடைபெறும் சில அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது" என்று அறியப்படுகிறது. 

இறுதியாகஇ அறிக்கையில் "தற்போதைய புவிசார் அரசியல் நிலைமை குறித்தும், உலகில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதில் மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிடப்பட்டது".