உண்மைக்குத் துணிவது சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

14 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 15 ஆம் வாரம் – திங்கள்
விடுதலை பயணம 1: 8-14, 22
மத்தேயு  10: 34- 11: 1
 
 
உண்மைக்குத் துணிவது சீடத்துவம்! 

முதல் வாசகம்.

முதல் வாசகம், அடுத்த சில வாரங்களுக்கு முதல் வாசகமாகப் பயன்படுத்தப்படும் விடுதலைப் பயண நூல்கான தொடக்கமாக அமைக்கிறது   யோசேப்பு இறந்துவிட்டார், எகிப்தில் ஒரு புதிய அரசராட்சி தோன்றியுள்ளது.   இந்த  புதிய அரசர் யோசேப்பை முன்பின் அறிந்திராதவர் என்பதால், யோசேப்பின்   தலைமையை மதிக்கவில்லை.

இஸ்ரயேல் மக்களினம் அங்கு பளுக்கிப் பெரு எகிப்தியரைவிட பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் இருந்தது. எனவே,  அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்பட புதய அரசன் முடிவெடுத்தான்.

மேலும் யோசேப்பின் சந்ததியினரும் அவரது சகோதரர்களின் சந்ததியினரும் புதிய அரசாங்கத்தை முறியடிப்பார்கள் என்று அஞ்சினான்.  இதனால், இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுகிறார்கள் அத்துடன், எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்கினர்.  

நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு யாராரெல்லாம் இறைப்பணியாளர்களுக்கு உதவி செய்கின்றார்களோ - அவர்களை ஏற்றுக்கொள்கிறார்களோ - அவர்கள் பெறப் போகின்ற கைமாறைக் குறித்துப் பேசுகின்றார். மேலும், தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்´என்று அறிவுறுத்துகிறார்.

தொடர்ந்து, “உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார், என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்கிறார். இயேசு கூறும் இந்த கூற்றில் நான்கு பேர் அடங்கி இருக்கிறார்கள். முதலாவது இயேசுவை அனுப்பிய தந்தைக் கடவுள், இரண்டாவது இயேசு கிறிஸ்து. மூன்றாவது இயேசுவால் அனுப்பப்படுகின்ற தூதுவர்கள். நான்காவது அதனை ஏற்றுக்கொள்கின்ற/ ஏற்றுக்கொள்ளாத மக்கள் என்பதை மத்தேயு விவரிக்கிறார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியில்,  “இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேரிமையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார் எனும் இயேசுவின் படிப்பினை இன்றியமையாததாகும்.

நாம் ஆண்டவராகிய இயேசுவின் திட்டத்தைப் பின்பற்றும்போது, எதிர்ப்பு, ஏளனம் மற்றும் நேரடி நிராகரிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இயேசு இதை அவரது சொந்த தனிப்பட்ட அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறார். அவரது அன்பான சேவை ஊழியம் அவரை சிலுவைக்கு அழைத்துச் சென்றது. இன்று, நாமும் அதே சிலுவையை நோக்கிச் செல்ல வேண்டியவர்கள் என்று அறிவுறுதப்படுகிறோம்.   

முதல் வாசகத்தில் அறிந்ததைப்போல, இஸ்ரயேலர்   கடவுளால் "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்." இருப்பினும், எகிப்தில்  புதிய தலைமை ஆட்சிக்கு வரும்போது, இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டு,   பயந்து, இஸ்ரவேல் மக்களை ஒடுக்க முடிவு செய்கிறார்கள். ஆம். தேர்ந்தெடுக்ப்பட்ட மக்களுக்குத் துன்பம் என்பது புதிதல்ல. 

இன்றைய நற்செய்தியில்,  இயேசு கூறுகிறார்: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்’ என்பது நம்மில் பலருக்கு அதிர்ச்சியாகவும் இருக்கக்கூடும்.   ஏனெனில், நற்செய்தியில் இயேசு அமைதி நிறைந்தவராகவும்   கடவுளின் அமைதியின் தூதுவராகவும்  சித்தரிக்கப்படுகிறார் (லூக் 2:14).

இங்கே, இயேசு கொணர்கிற வாள் என்பதைப் போர்வீரரின் வாள் என்று புரிந்துகொள்வதை விட, அது மருத்துவர் அறிவைச் சிகிச்சைக்குப் பயனபடுத்தும் கத்தியைப் போன்றது   எனப் புரிந்துகொள்வது நலம் என்கிறார் ஓர் அறிஞர்.  மருத்துவரின் கத்தி அறுவைச் சிகிச்சைகை உதவினாலும் , இறுதியில் நோயாளி குணம்பெறுகிறார் என்பதே உண்மை.. இயேசுவைத் தெரிந்துகொள்வதால் நாம் நம் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டதுபோலத் தெரிந்தாலும், இறைவனோடு இணைகிறோம் என்பதால் அது நமக்கு நமக்குத் தரும் செய்தி. உண்மையை உரைப்பது சிலருக்கு குத்தலாக இருக்கும் என்பதால் பிளவு ஏற்படத்தான் செய்யும். 

எனவே, நாம் அவரால் தேரந்துகொள்ளப்பட்டவர்கள் என்பாதல், அவரது பக்கம் இருந்து உலகைப் பார்க்க வேண்டும். பட்டத்திற்குப் பதவிக்கும் பேருக்கும் புகழுக்கும், பணத்துக்கும் அதிக வருமானத்துக்கும்  ஆசைப்பட்டு நற்செய்திக்குப் புறம்பானவற்றை ஏற்கும் போது ‘அவர் விதைத்த அமைதியை நம்மால் அனுபவிக்கவும் பகிரவும் முடியாது. நாம் அலகையின்ஆதிக்கத்திற்கு உட்வட்டவர்கள் ஆவோம். உண்மையை எடுத்துரைக்கும் போது, உலகம் நம்மை பகைக்கும். அதற்காக, நமக்கு ஏன் ‘பொல்லாப்பு’ என்று ஒதுங்கி வாழ நினைப்பது கோழைத்தனம். 

இறைவேண்டல். 

இயேசுவே, உம்மை நோக்கிய எனது பயணம் வேதனையான மற்றும் துக்ககரமான தருணங்களைக் கொண்டுள்ளது என்பதை நீர் எனக்கு வெளிப்படுத்தியதற்காக உமக்கு நன்றி நவில்கிறேன். ஆமென். 
  
      
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452