இயேசுவில் உறவு  கொண்டு வாழ்வோம். | ஆர்கே. சாமி | Veritas Tamil

29 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 17ஆம் வாரம் –செவ்வாய்
புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர்-நினைவு
விடுதலை பயணம  33: 7-11; 34: 5-9, 28
யோவான் 11: 19-27


 இயேசுவில் உறவு  கொண்டு வாழ்வோம்.

முதல் வாசகம்.

இன்றைய வாசகத்தில்   இஸ்ரயேலர் ஒரு தங்கக் கன்றுக்குட்டியைக் சிலையாக வடித்து, வழிபட்டத்ற்காக அவர்கள் சார்பில்   கடவுளிடம் மன்னிப்பு கேட்கவும்,   மோசே மலையிலிருந்து இறங்கி வந்தபோது கோபத்தில் முதல் கட்டளையை உடைத்ததால்,  பத்து கட்டளைகளின் புதிய பிரதியைப் பெற மீண்டும் கடவுளின் மலையில் (சினாய் மலை) ஏறுகிறார். மோசே "வணங்கா  கழுத்துள்ள" மக்களிடம் பொறுமைக்காக கடவுளிடம் மன்றாடுகிறார்.  மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும் பாவம் செய்து விட்டீர்கள்; இப்போது நான் மலைமேல் ஏறி ஆண்டவரிடம் செல்லப் போகிறேன் என்று மீண்டும் மக்க்ளுக்காக பரிந்துரைத்து மன்றாட விழாகிறார்.

மோசே பொறுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், கோபத்தில் சட்டங்களின் கல் பலகைகளை உடைத்திருக்கக்கூடாது என்பதையும் கடவுள் மோசேவுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். 

நற்செய்தி.

இன்றைய புனிதர்களான மார்த்தாள், மரியாள் மற்றும் லாசரஸ் ஆகியோரின் பதிவுகளில், கடவுளிடம் பொறுமையாக இருப்பது குறித்து நமக்கு உண்ர்த்தப்படுகிறது.  மரியாவின் உதவியின்றி இயேசுவுக்கு சேவை செய்வதாலும், இறந்த தனது சகோதரனைப் பற்றிய அக்கறையாலும் மார்த்தா பொறுமையிழந்து காணப்படுகிறாள்.   மார்த்தா பொறுமை காக்க வேண்டும் என்றும்,  இயேசு அவருடன் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும் இயேசு வாய்ப்பளிக்கிறார்,   மேலும் அவள் ஆண்டவரின் உடனிருப்பை  புரிந்து கொள்ள வேண்டும் என்றும், 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே' என்றும்  இயேசு அறிவுற்றுத்துகிறார். 

சிந்தனைக்கு.

மார்த்தா பெத்தானியாவை சேர்ந்தவர். மரியா, மற்றும் லாசர் இவருடைய சகோதர, சகோதரி ஆவர். இவர்கள் மூவரும் ஆண்டவர் இயேசுவால் அதிகமாக அன்பு செய்யப்பட்டவர்கள் (யோவான் 11:5). லூக்கா 10-ல் உள்ள பதிவில்,  மார்த்தா விருந்தோம்பல் மற்றும் இயேசு, அவரது சீடர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மும்முரமாக இருப்பதை நமக்குக் காட்டியது.. மார்த்தா பொறுமையிழந்து, மரியா தம்  வேலைகளில் உதவவில்லை என்று இயேசுவிடம் புகார் கூறுகிறாள். ஆனால் மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருக்குச் செவிசாய்க்கிறாள். மரியா உண்மையிலேயே பொறுமையான சீடராக சித்தரிக்கப்படுகிறாள். இருவரில் ஒருவர் பொறுமையற்றவர், மற்றவர் பொறுமைக்குரியவர். 

ஆனால், யோவான் 11-ல் உள்ள நற்செய்தி விவரத்தில் மார்த்தா இயேசு தனது சகோதரனுக்கு உதவவும், அவன் இறப்பதைத் தடுக்கவும் விரைவில் வரவில்லை என்ற வேதனை ஒருபுறம் இருக்க  அவள் இயேசுவில் நம்பிக்கை வைககிறாள். இயேசுவால் வல்ல செயல் செய்ய முடியும என்று அவள் நிம்புகிறாள்.

இப்போ, இலாசர் இறந்து நான்கு நாள்கள் ஆகின்றன   ஆறுதல் கூற வந்தவர்களுள் இயேசுவும் ஒருவராகிறார்.    அவரை எதிர்கொண்டு செல்கின்ற மார்த்தா, 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்' என்று தன் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்.  

யூதர்கள் இறந்தவரின் ஆன்மா மூன்று நாள் இவ்வுலகில் இருக்கும் என்ற  நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, 'ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே!' என்கிறார் மார்த்தா.  இயேசுவோ, 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே' என்ற அவரில் கொள்ளும் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். அத்துடன் மார்த்தா  இயேசுவிடம் ‘நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

நம்மில் உள்ள ஆழமான நம்பிக்கை ஒரு கொடை. இயேசுவில் கொண்ட நம்பிக்கை நமக்கு தும்பிக்கை போன்றது. அதன் ஆற்றல் மிகப் பெரியது.  இஸ்ரயேல் மக்களைப் போன்று ‘வணங்கா கழுத்துள்ளோராக நாம் இரந்தோமானால். இக்கொடை நம்மில் பலனளிக்காது. மார்த்தா போன்று விருந்தினரை நன்கு உபசரிக்கும் குணமும் இயேசுவே மீட்பராகிய ஆண்டவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் நம்மில இருந்தால், நம்மோடும் ஆண்டவர் விருந்துண்டு, உறவாடி மகிழ்வார்.  

இறைவேண்டல்.


'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே' என்றுரைத்த ஆண்டவரே, உம்மில் நான் உயிர்த்தெழுவேன் என்ற நம்பிக்கை என்னில் வேரூன்றி நிற்க என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452