தினசரி மறைசாற்று | எழுத்து அருட்பணி மைக்கல் ராஜா MMI | Veritas Tamil

பொதுக்காலம் 17-ம் வாரத் திங்கள்

 

விண்ணரசு கடுகு விதைக்கும்

புளிப்புமாவிற்கும் ஒப்பாகும்

       - மத் 13: 31-35

 

பெரியன போற்றுதலும்

சிறிதென தூற்றுதலும் உலக வழி!

 

பெரும்பான்மை; செல்வாக்கு

பெரியது; திறமையானது

உலகப் புகழ்; தனித்துவம் - என

உலக வழி காணாமல்

சிறுபான்மை; செல்வாக்கற்ற

சிறிதான; திறனற்ற

கண்டுகொள்ளப்படாத; எவருமற்ற - என

உன்னத வழிகண்டவர் இயேசு! 

 

கடுகும் - புளிப்புமாவும்

காண்பதற்கு சிறிதாயினும்

காடும் வியக்கும் - வீடும் சிறக்கும்!

 

பிரபஞ்ச படைப்பில்

துகள் அளவு கூட நாமில்லை.

ஆனாலும் கடவுள் முன்

நாமெல்லாம் உத்தமமே!

எழுத்து
அருட்பணி மைக்கல் ராஜா MMI