அழாதீர்! | அருட்பணி மோசஸ் ராஜா MMI | Veritas Tamil

பொதுக்காலம் 24-ம் வார செவ்வாய்கிழமை

அழாதீர்! - லூக்கா 7: 11-17

அழாதீர்... உலக மாயை இப்படித்தான்

'உண்டு - இல்லை' என துண்டாய் பேசும்!

அழாதீர்... உடலின் நிலை இப்படித்தான்

'வாழ்வு - சாவு' என உறுதி பேசும்!

அழாதீர்... உலக நியதி இதுதான்

தொடக்கம் - முடிவு என அடங்கிவிடும்!

அழாதீர்...

இதையெல்லாம் தாண்டிய ஒருவர் உண்டு

நம்மிடையே தோன்றிய இறைவாக்கினர் அவரே

"எழுந்திடு" என்றிடும் இயேசு இவரே

அழாதீர்... கைம்பெண்ணே உம் நிலை

என் தாயால் நான் அறிவேன்

அழாதீர்... - என மனமடைந்தோருக்கு

மன உறுதி கொடுப்போமா?

எழுத்து

அருட்பணி மோசஸ் ராஜா MMI