விசுவாசம் மற்றும் தோழமையின் குடும்ப விருந்து | Veritas Tamil

செப்டம்பர் 9, 2025: மகாராஷ்டிரா மாநிலம் ராசாயனியில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் அன்னை மரியின் பிறந்தநாள் பெருவிழா, பக்தி மற்றும் செபத்தோடு மட்டுமின்றி, பங்குமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு குடும்ப விருந்துடன் கொண்டாடப்பட்டது. நற்கருணை கொண்டாட்டம் மற்றும் அன்னை மரியாளின் பிறந்த நாளில் மலர் அஞ்சலி செலுத்திய மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
அதன்பின் ஆலயவளாகத்திலே மதிய உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பங்கு மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் குடும்ப விழாக்களைப் போலவே, தேவையான பொருட்களை, வளங்களை மற்றும் நேரத்தை வழங்கினர். இந்த உணவு உண்மையான குடும்ப பாணியில் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது.சமைத்தல், ஏற்பாடு செய்தல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அங்கு அனைவரும் ஒரே விசுவாச குடும்பமாக தாங்கள் இருப்பதை உணர்ந்தனர். இந்த மதிய உணவு உடலுக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல; இது ஆன்மாவுக்கான உணவாகும், இது "மகிழ்ச்சியோடும் நேர்மையான இருதயத்தோடும் உணவைப் பகிர்ந்துண்ட" (அப்போஸ்தலர் 2:46) ஆரம்பகால கிறிஸ்தவ சமூகங்களை நினைவூட்டுகிறது.
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அருகருகே அமர்ந்து, அன்புடனும் அர்ப்பணிப்புடனும் தயாரிக்கப்பட்ட உணவுகளை ரசித்து உண்டனர். சிரிப்பு, கலகலப்பான உரையாடல்கள் மற்றும் மகிழ்ச்சியான ஒன்றுகூடல் ஆகியவை ஒற்றுமையின் சாராம்சத்தை பிரதிபலித்தன. பங்கு மக்கள் ஒரு நிகழ்வை நடத்துவதோடு மட்டுமன்றி, மரியாவின் வழியாக நம்பிக்கையிலும், கிறிஸ்துவின் வழியாக விசுவாசத்திலும் பலப்படுத்தப்பட்ட ஒரு குடும்பமாக தங்கள் அடையாளத்தை கொண்டாடினர்.
பகிர்ந்த உணவு ஒரு ஆழமான உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விசுவாசம் செபம் மற்றும் வழிபாட்டில் மட்டும் வளர்க்கப்படுவதில்லை, ஆனால் ஒரு சமூக உணர்வில் வாழும்போது அது மேலும் வலுவடைகிறது. அன்பு மற்றும் ஒற்றுமையின் செயல்களில் வெளிப்படும் போது நம்பிக்கை உறுதியானதாகிறது. ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து, கிறிஸ்து அரசர் தேவாலயத்தின் பங்கு மக்கள் ஒரே குடும்பமாக இருப்பதன் எளிமையான ஆனால் ஆழமான மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடித்தனர்-அதாவது, விசுவாசத்தை ஒன்றாக வாழவும், பகிர்ந்து கொள்ளவும், கொண்டாடவும் அழைக்கப்பட்ட ஒரு சமூகம்.
Daily Program
