பல்வேறு துறவற சபைகளின் தலைவர்களை சந்தித்த திருத்தந்தை லியோ | Veritas News

ஜூலை 12, சனிக்கிழமை காஸ்தல் கந்தோல்போ திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்தில் பல்வேறு துறவற சபைகளின் பொதுப்பேரவையை முன்னிட்டு அதன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்தபோது அனைத்து மனிதகுலத்தையும் ஒரு பெரிய குடும்பமாகத் தன்னிடம் கொண்டு வர விரும்பும் கடவுளது மீட்பின் திட்டத்தினால் துறவற நிறுவனங்கள் பிறந்தன என்றும், துறவற சபை நிறுவனர்களின் வழிகாட்டுதல்கள், மற்றும் பங்களிப்புக்களின் வழியாக "கிறிஸ்தவ சமூகம் முழு உண்மையை நோக்கி அன்புடன் நடக்க தூய ஆவியார் உதவுகின்றார்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார்.
பொதுப்பேரவைக்கான தயாரிப்புக் காலத்தில் செபம், இணக்கமுள்ள செவிசாய்த்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பணிகள் அனைத்தும் தூய ஆவியாரின் கனிகள், விலைமதிப்பற்ற பரிசுகள் என்றும், துறவற சபை நிறுவனர்களின் வழிகாட்டுதல்கள், மற்றும் பங்களிப்புக்களின் வழியாக "கிறிஸ்தவ சமூகம் முழு உண்மையை நோக்கி அன்புடன் நடக்க தூய ஆவியார் உதவுகின்றார் என்றும் உண்மையான மறைப்பணி உணர்வைப் புதுப்பித்தல், கிறிஸ்து இயேசுவின் உணர்வுகளைத் தழுவுதல், கடவுளில் நம்பிக்கையை வேரூன்றச் செய்தல், தூய ஆவியாரின் ஒளியை நம் இதயங்களில் உயிர்ப்புடன் வைத்திருத்தல், அமைதியை ஊக்குவித்தல், உள்ளூர் தலத்திருஅவைகளில் மேய்ப்புப்பணியில் கூட்டுப் பொறுப்பை வளர்த்தல் போன்றவை மிக அவசியம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை லியோ.
கிறிஸ்துவை மிகவும் நெருக்கமாகப் பின்பற்றுதல் என்ற உணர்வோடு ஒன்றிணைந்திருக்கும் துறவற ஆண்கள் மற்றும் பெண்கள், சமூகத்தில் தங்களது இருப்பின் செழுமையைப் புரிந்துகொள்ள பிறருக்கு உதவுகின்றார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இந்த நிலையானது ஒரே திருஅவையாக இருப்பதற்கான விழிப்புணர்வையும் மகிழ்வையும் நம்மில் புதுப்பித்து உறுதிப்படுத்தட்டும் என்றும் கூறினார்.
அனைத்து மனிதகுலத்தையும் ஒரு பெரிய குடும்பமாகத் தன்னிடம் கொண்டு வர விரும்பும் கடவுளது மீட்பின் திட்டத்தினால் துறவற நிறுவனங்கள் பிறந்தன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இத்தகைய மன்பான்மையின் அடிப்படையில் தான் துறவற நிறுவனங்களின் ஒவ்வொரு முயற்சியும் வைக்கப்பட வேண்டும் என்றும், இதன் வழியாக சிறிய விளக்குள் மூலம் பூமி முழுவதும் கிறிஸ்துவின் ஒளியை ஒருபோதும் மங்காதுப் பரப்பப் பங்களிக்கும் என்றும் வலியுறுத்தினார்.
Daily Program
