குழந்தைகளின் நிலையில் இறங்கி அவர்களின் கண்கள் வழியாக உலகைப் பார்க்க - திருத்தந்தை லியோ | Veritas Tamil


குழந்தைகளின் நிலையில் இறங்கி அவர்களின் கண்கள் வழியாக உலகைப் பார்க்க.
 
திருத்தந்தை லியோ 14 தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது பணிவால்வை மையப்படுத்தி பல சிறப்பான புகைப்படங்கள் பரவி வருகின்றன. அதில் குறிப்பாக ஒரு சிறுமி தன் கைப்பட வரைந்த  ஓவியத்தை பரிசாக வழங்வி திருத்தந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற படம் ஒன்றுவெளியாகியுள்ளது. 


திருத்தந்தை லியோ XIV  இன் பதவிக் காலத்தின் முதல் இரண்டு மாதங்களில் பல படங்கள் அர்த்தமுள்ளதாக உள்ளன. 

 மே மாதம்  8 ஆம் தேதி திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தனது முதல் உர்பி எட் ஓர்பி ஆசீர்வாதத்தின் போது, புனித பேதுரு பசிலிக்காவின் மாடியில் நின்று சந்தோஷமாக கூடியிருந்த மக்களை பார்த்தபோது, தனது உணர்ச்சியை அடக்க முயன்ற அந்த தருணம் போல.வத்திக்கான் கோடைக்கால முகாமைச் சேர்ந்த ஒரு சிறுமி,  தன் கைப்பட வரைந்த  ஓவியத்தைக்  திருத்தந்தையிடம் காட்ட, அதை திருத்தந்தை  குணிந்து   தனது குதிகாலில் அமர்ந்து அந்த ஓவியத்த பார்த்து பாராட்டுகிறார். 

அவர்களின் புன்னகைகள் நம்மைத் தாக்குகின்றன:

திருத்தந்தையோ புகைப்படம் எடுக்கும் நபரை பார்க்கிறார். அதே நேரத்தில் திருத்தந்தையின் செயலால் கவரப்பட்ட அந்தப் பெண் கேமராவைப் பார்க்காமல், தனது புன்னகை பார்வையை  திருத்தந்தை லியோ மீது நிலைநிறுத்துகிறார்.

இந்த உருவப்படம் ஏன் இவ்வளவு வியக்க வைக்கிறது?

ஏனென்றால், குனிந்து நிற்கும் அந்த எளிய செயலில், அனைத்து மக்களும், குறிப்பாக உலகின் தலைவிதியை தங்கள் கைகளில் வைத்திருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு திசையாக  திருத்தந்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்: குழந்தைகளின் நிலையில் இறங்கி அவர்களின் கண்கள் வழியாக உலகைப் பார்க்க.

"சிறு பிள்ளைகளை  என்னிடம் வரவிடுங்கள்" என்று கூறிய இயேசுவின் அழியா வார்த்தைகளை மேற்கோள் காட்டி குழந்தைகள் என்றால்  "தொந்தரவு செய்வார்கள் என்னும் முன்சார்பு எண்ணத்தில் குழந்தைகளை விரட்ட முயன்ற சீடர்களை இயேசு கடிந்துகொண்டது போல, நாம் ஒவ்வொருவரும் நம்மைத் தாழ்த்திக் கொள்ளத் துணிந்தால், மனிதகுலத்தின் போக்கு எவ்வளவு மாறும்?

இன்றைய உலகில், நாம் எத்தனை முறை குழந்தைகளை நம்மிடம் வர அனுமதிக்கிறோம்? அதைவிட முக்கியமாக — நாம் எத்தனை முறை அவர்களிடம் செல்வதற்கான முயற்சி செய்கிறோம்?

போரினால் பாதிக்கப்பட்டு சிக்கிய குழந்தைகள், மற்றவர்களின் சுயநலத்தால் பட்டினியால் வாடுபவர்கள், எண்ணற்ற வழிகளில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள், பராமரிக்க நாம் முயற்சி செய்கிறோமா?பெரியவர்கள் ஏற்படுத்தும் போர்களில் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.

பகுத்தறிவும் வலிமையும் உடைய  நாம்தான் சிறியவர்களைப் பாதுகாக்க வேண்டும். மாறாக, இதற்கு நேர்மாறாக எல்லாம் நடக்கிறது. பெரியவர்களால் தீர்மானிக்கப்படும் போர்களில், முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
காசா, கார்கிவ், கோமா மற்றும் ஆயுத மோதலால் சிதைந்த எண்ணற்ற இடங்களில் உள்ள குழந்தைகளின் நிலைக்கு நாம் தாழ்ந்து சென்று பார்த்தால் என்ன காண்போம்? ஒருவேளை நாம் அப்படி செய்தால், ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கலாம்.


"இந்த உலகில் நிஜமான சமாதானத்தை கற்றுக் கொடுக்கவேண்டுமென்றால், மேலும் போரை எதிர்க்கும் உண்மையான போராட்டத்தை நடத்தவேண்டுமென்றால், நாம் குழந்தைகளிலிருந்து துவங்க வேண்டும்" என்று மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார்.


ஒரு நிமிடம்  கற்பனை செய்து பாருங்கள், பெரும் வல்லரசு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் ஐ.நா. பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில்அமர்ந்திருந்தால். சர்வதேச உறவுகள் எப்படி மாறும் என்பது யாருக்குத் தெரியும்.

துரதிர்ஷ்டவசமாக, போரின் யதார்த்தம் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே விஷத்தைப் போல நம்மில் புகுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் கசப்புடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் நிழல் சூழ்ந்திருந்தபோது எழுதப்பட்ட ஒரு கவிதையில் பெர்டோல்ட் பிரெக்ட் இதை மிகவும் துல்லியமாகக் கூறினார்: “குழந்தைகள் போரில் விளையாடுகிறார்கள். அவர்கள் அரிதாகவே சமாதானத்தில் விளையாடுகிறார்கள். ஏனென்றால் பெரியவர்கள் எப்போதும் போரை நடத்தி வருகின்றனர்.”

பெருவில் ஒரு மறையியளாராகவும் மற்றும் ஆயராகவும் இருந்தபோது, திருத்தந்தை லியோ பல முறை குழந்தைகளின் நிலைக்கு தாழ்ந்து சென்று அவர்களை சந்தித்தார். அதைப் பற்றிய எண்ணற்ற புகைப்படங்கள் உள்ளன.
இப்போது அவர் உரோம் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்தாலும், அவரது நடைமுறை மாறவில்லை என்பதை பால் VI மண்டபத்தில் நடந்த வத்திக்கான் கோடை முகாமின் புகைப்படம் நமக்குத் தெளிவாக நினைவூட்டுகிறது.

அப்படியானால், சிறியவர்களாக மாறுவது என்பது நமது மனிதநேயத்தை பெரிதாக்குவதாகும். இது இன்று நமக்கு மிகவும் தேவையான பாடமாகும்.