மறைக்கல்வி கற்பிக்கும் முறையை புதுப்பியுங்கள். | Veritas Tamil

 

திருத்தந்தை லியோ அவர்கள் மறைக்கல்வி கற்பித்தலை புதுபிக்க லத்தின் அமெரிக்கா மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். 

ஜூலை 10, 2025, திருத்தந்தை லியோ அவர்கள் பாரகுவே நாட்டின் அசுன்சியோனில் நடைபெறும் மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான ஆய்வுநாட்களில் பங்கேற்கும் லத்தின் அமெரிக்கா முழுவதிலுமுள்ள ஆசிரியர்களுக்கு, நற்ச்செய்தியைப் பரப்பும் தீவிர ஆசையை மீண்டும் புதுப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆய்வுநாட்கள், தேவாலயத்தில் ஒற்றுமை, பங்குபற்றுதல், மற்றும் பணிக்கான சிந்தனையின் பாதையில் SCALA) ஆழமாக கவனம் செலுத்துகின்றன.


13வது பொதுக்கூட்டம் மற்றும் 10வது ஆய்வுநாள்கள் ஆகிய  (Sociedad de Catequetas Latinoamericanos, SCALA),  கூட்டத்திற்கான செய்தியில், திருத்தந்தை லியோ XIV அவர்கள் அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவர் தனது நம்பிக்கையைத் தெரிவித்தார். 
“இயேசு நசரேயன் என்பவரின் உருவத்தைத் தங்களின் அடிப்படை  நோக்கமாக எடுத்துக்கொண்டு சிந்திக்க வேண்டும்.
அவர் தான் மறைக்கல்வியின் மையம் மற்றும் குறிக்கோள்”.
இது, மறைக்கல்வி கற்பித்தல் பணியின் வழியாக உள் ஆழத்தில் இயேசுவை சந்திக்கவைக்கும் ஒரு அழைப்பு. 


"இயேசுவைப் பற்றிய இந்த அன்பான அறிவின் அடிப்படையில்",  "அவரை அறிவிக்கவும், 'திருவிவிலியம்  அறிவிக்கவும்', மற்றவர்கள் அவர் மீதுள்ள விசுவாசத்திற்கு 'ஆம்' என்று சொல்ல வழிநடத்தவும், அவருடைய அன்பான பிரசன்னத்தைக் காட்டவும்" அவர்களுக்குள் விருப்பத்தைப் புதுப்பிக்க அவர் அவர்களை ஊக்குவிக்கிறார்.


1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட SCALA  லத்தின் அமெரிக்கா முழுவதிலுமுள்ள கிறிஸ்தவ மதக் கல்வியில் ஆர்வமுள்ள புலமைவாதிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பாகும்.இந்த அமைப்பு, அந்தப் பகுதியிலுள்ள தேவாலயத்தின் மக்களை விசுவாசத்தில் வளர்த்தெடுக்க மற்றும் இறைச்செய்தியை பரப்ப உதவும் பணி மற்றும் நோக்கங்களை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
 

இந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் ஆய்வுநாட்களும் ஜூலை 7 முதல் 11 வரை நடைபெற்று வருகின்றன. இதில் பிரேசில், ஈக்வடார், பெரு, போலிவியா, சிலி, ஹொண்டுராஸ், உருகுவே, வெனிசுவேலா, கோஸ்டா ரிகா, அர்ஜெண்டினா மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல மறைக்கல்வி கற்பிப்பதில் திறன் பெற்றவர்கள்  மற்றும் மறைக்கல்வி கற்பிப்பவர்கள என அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்று இருக்கின்றனர்.
இது ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கும், கூட்டு பணிக்கான ஊக்குவிப்புக்கும் வழிவகுக்கும் அரிய வாய்ப்பாக இருக்கிறது! 

அந்த நாள்களில், மதக் கல்வி புலமையாளர்கள், போப் ஃப்ரான்சிஸ் தொடங்கிய "சினோடல் பாதையை" (Synodal Path) முக்கியமாக ஆராய்ந்து கவனம் செலுத்துவார்கள். இதில், தேவாலயத்தில் ஒற்றுமை, பங்களிப்பு, மற்றும் பணிக்கான புதிய வழிகளைக் கண்டறிவதே குறிக்கோள். அவர்கள் இந்த அனுபவத்திலிருந்து தத்துவவியல் பார்வையில் கற்றுவிப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டல் வழங்க இயலும் என நம்புகிறார்கள்.

இது விசுவாசத்தில் ஆழமடையும், வழிகாட்டும் பயணமாகும்!