மரணத்தை ஏமாற்றுவதால் அல்ல, சேவையிலும் அன்பிலும் மற்றவர்களைக் கவனித்துக்கொள்வதே நிலைவாழ்வு பெறுகிறோம் | Veritas Tamil

நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

நிலைவாழ்வை குறித்து, காஸ்டல் காண்டால்போவில் உள்ள விசுவாசிகளுடன் சேர்ந்து, மூவேளை செபத்தை செபித்த திருத்தந்தை  லியோ XIV மரணத்தை ஏமாற்றுவதன் மூலம் அல்ல, சேவையிலும் அன்பிலும் மற்றவர்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம் நாம் நிலைவாழ்வைப் பெறுகிறோம் என்பதை கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்டுகிறார்.

காஸ்டல் காண்டால்போவில் கோடை விடுமுறைகள் தொடரும் வேளையில், திருத்தந்தை  லியோ XIV ரோம் அருகே உள்ள மலை உச்சி நகரத்திற்கு வந்த திருப்பயணிகளுடன் சேர்ந்து,  பாரம்பரியம் மிக்க மரியன்னையின்  மூவேளை செபத்தை ஜெபத்தை ஜெபித்தார்.

சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்தவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை,  நற்செய்தியில் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வியைப் பற்றி சிந்தித்தார்: "போதகரே, நிலைவாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?"

அந்த மனிதனின் கேள்வி மனித இதயத்தின் ஆழமான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது என்பதை  தந்தை உணர்ந்தார். அது "தோல்வி, தீமை மற்றும் மரணம் இல்லாத ஒரு இருப்புக்கான" ஆசையாகும்.

நாம் ஒருபோதும் நிலைவாழ்வை  வலுக்கட்டாயமாகவோ அல்லது அதைப் பெறுவதற்காக பேரம் பேசவோ முடியாது,  மாறாக நாம் அதை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

"கடவுள் மட்டுமே கொடுக்கக்கூடிய நிலைவாழ்வைப்,  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செய்வது போல, நமக்கு ஒரு பரம்பரையாக வழங்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

இந்தக் காரணத்திற்காகவே, கடவுளின் சித்தத்தைச் செய்ய வேண்டும் என்று இயேசு கூறுகிறார். அதாவது கடவுளை நம் முழு இதயத்தோடு அன்புசெய்ய வேண்டும்.  நம்மை நாம் அன்பு செய்வது போல  நம் அயலாரையும் அன்பு செய்ய வேண்டும். 

"நாம் இந்த இரண்டு காரியங்களையும் செய்யும்போது, விண்ணகத் தந்தையின் அன்புக்கு பதிலளிக்கிறோம். "கடவுளின் திட்டம்  என்பது  முதன்முதலில் விண்ணகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதும், பின்னர்  இயேசுவை  நிபந்தனையின்றி அன்பு செய்வதும் ஆகும். 


அன்பு தாராளமானது, மன்னிக்கும் தன்மை கொண்டது, விசாலமானது, ஒருபோதும் நம்மை நாமே மூடிவைத்துக்கொள்ள விடாது என்று கூறி, உண்மையான அன்பின் அர்த்தத்திற்காக இயேசுவை நோக்கிப் பார்க்குமாறு கிறிஸ்தவர்களை வலியுறுத்தினார்.

இயேசு கிறிஸ்துவில் கடவுள் மனிதகுலத்தை நெருங்கி வந்ததைப் போலவே, நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பராமரிக்க நாமும் அழைக்கப்படுகிறோம்.

"உலகின் மீட்பரான இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாமும், எல்லாவற்றிற்கும் மேலாக, மனச்சோர்வையும், ஏமாற்றத்தையும் அனுபவிப்பவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வர அழைக்கப்பட்டுள்ளோம்" .

கடவுளையும் நம் அண்டை வீட்டாரையும் நேசிக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட கட்டளை அனைத்து மனித சட்டங்களையும் மீறி, அவற்றுக்கு உண்மையான அர்த்தத்தை அளிக்கிறது என்பதை நினைவு கூர்ந்து,  தனது மூவேளை  செபத்தை நிறைவு செய்தார்.


"நாம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், மரணத்தை ஏமாற்ற வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக,  பிறரை பராமரிப்பதன் மூலம் வாழ்வை காக்க வேண்டும்."
பிறரின் வாழ்வை காக்க முயற்சிசெய்யும் போது, “சமாதானத்தின் கலைஞர்களாக” ஆகின்றோம் என்று அவர்கள் கூறினார்.