வத்திக்கான் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் இந்தியாவிற்கு வருகை தருகிறார் | Veritas Tamil

பேராயர் கல்லாகர் இந்தியாவிற்கு வருகை தருகிறார்
நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர், 'நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை வலுப்படுத்த' இந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
வத்திக்கான் அதிகாரி பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர், ஜூலை 13 ஞாயிற்றுக்கிழமை ஆசிய நாட்டிற்கு வந்து, ஜூலை 19 சனிக்கிழமை வரை அங்கேயே இருப்பார் என்று, திருஅவையின் வெளியுறவுச் செயலகமான டெர்சலோஜியா @TerzaLoggia அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்துள்ளது.
பேராயரின் வருகை, "திருஅவைக்கும் இந்தியக் குடியரசுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதே இதன் நோக்கம்" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்து மதம் பெரும்பான்மை கொண்ட இந்திய நாட்டில், கத்தோலிக்க திருஅவை தான் மிகப்பெரிய மற்றும் மிகப்பெரும் உறுப்பினர்களைக் கொண்ட கிறிஸ்தவ திருஅவையாக விளங்குகிறது. இது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோருக்கு ஆன்மிக வழிகாட்டியாகவும், சமூக சேவைகளில் முக்கிய பங்காற்றும் அமைப்பாகவும் திகழ்கிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 23 மில்லியனுக்கும் அதிகமான கிறிஸ்தவ விசுவாசிகள் உள்ளனர். கத்தோலிக்கர்களை ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிக சிறிய சதவீதமாக இருந்தாலும், மொத்த மக்கள்தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், அவர்களின் எண்ணிக்கை கணிசமானதாக உள்ளது.
இந்திய நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபை லத்தீன், சிரோ-மலபார் மற்றும் சிரோ-மலங்கரா சடங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Daily Program
