வாழ்க்கையின் புனிதத்தை மதிப்போம் | Veritas Tamil

வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்களின் உயிர்கள் மதிக்கப்பட வேண்டும்.


காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின்  மீதான தாக்குதலைத் தொடர்ந்து ,கரித்தாஸ் கூட்டமைப்பு ஒற்றுமை அறிக்கைகளை வெளியிட்டு, "வாழ்க்கையின் புனிதத்தன்மைக்கும் அதைப் பாதுகாக்கும் இடங்களுக்கும் மரியாதை" அளிக்க அழைப்பு விடுத்துள்ளது..

ஜூலை 17 ஆம் தேதி காலை காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின் மீது இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, காரிட்டாஸ் ஜெருசலேம் மற்றும் காரிட்டாஸ் இன்டர்நேஷனலிஸ் ஆகியவை தங்கள் "ஆழ்ந்த துக்கத்தையும் இரங்கலையும்" வெளிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டன.

இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்: 60 வயதுடைய சாத் சலாமே என்னும்  துப்புரவு பணியாளர்; 84  வயதுடைய ஃபுமாயா அய்யாத்,  மற்றும்  69 வயதுடைய நஜ்வா அபு தாவூத் அவர்கள் அல்-மமதானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவப் பொருட்கள் மற்றும் இரத்த அளவுகள் கடுமையான பற்றாக்குறை காரணமாக அவர்கள் காலமானார்கள். தாக்குதலின் போது மற்றவர்கள் காயமடைந்தனர், சிலர் மிகவும் மோசமாக இருந்தனர். ஏனெனில் தேவாலயத்தில் பல இடங்களிலிருந்து இடம் பெயர்ந்த பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

வாழ்க்கையின் புனிதத்தை மதிப்போம்:
கரிட்டாஸ் இன்டர்நேஷனலிஸின் பொதுச் செயலாளர் அலிஸ்டர் டட்டன், தாக்குதல் செய்தியைக் கேட்டு அவர்களுக்கு ஏற்பட்ட பேரழிவை எடுத்துரைத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

 மோதலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் "வாழ்க்கையின் புனிதத்தன்மையையும் அதைப் பாதுகாக்கும் இடங்களையும் மதிக்க வேண்டும்" என்றும் அழைப்பு விடுத்தார்.

காசா நகரில் உள்ள திருக்குடும்ப தேவாலயத்தைத் தாக்கிய இஸ்ரேலிய தாக்குதலில் முன்னதாக கொல்லப்பட்ட சாத் சலாமே மற்றும் ஃபௌமியா அய்யாத் ஆகியோருக்கு கிறிஸ்தவ பாலஸ்தீனியர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர் 

இந்தத் தாக்குதலில் அருட்தந்தை  கேப்ரியல் ரோமனெல்லியும் காயமடைந்தார். கடந்த வாரத்தில், பலத்த ஷெல் தாக்குதல்கள் மற்றும் அருகிலுள்ள இராணுவ நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் ஆபத்து காரணமாக அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர் காயமடைந்தார். 

காசா தேவாலய தாக்குதலுக்குப் பிறகு நெருக்கத்தை வெளிப்படுத்த திருத்தந்தை பிட்சபல்லாவை அழைக்கிறார்


காசாவில் உள்ள கரிட்டாஸ் ஜெருசலேம் தேவாலயத்தின் அருட்தந்தை ரோமனெல்லியின் எச்சரிக்கைகள் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்று வலியுறுத்தினர். "தந்தை கேப்ரியல் எங்களை வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்திருக்காவிட்டால், இன்று நாங்கள் 50 முதல் 60 பேரை இழந்திருப்போம். அது ஒரு படுகொலையாக இருந்திருக்கும்."

2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காசா சுகாதார மையத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களையும் அவர்களது குழந்தைகளையும் கரிட்டாஸ் ஜெருசலேம் குண்டுவெடிப்புகளில் இழந்த பிறகு இது வருகிறது.


ஜூலை 15, 2025 அன்று மத்திய காசா பகுதியில் உள்ள நுசைராத் அகதிகள் முகாமில் ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சூடான உணவினைப் பெற பாலஸ்தீனியர்கள் வரிசையில் நிற்கிறார்கள். 
உதவி கோரும் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது - மே 27 முதல் 758 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 5000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதன் விளைவாக, முழு மக்களும் - 2.1 மில்லியன் - கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்.

கிட்டத்தட்ட 80ம% தண்ணீர் மற்றும் சுகாதார நிலையங்கள் தீவிரமாக  மோதல் ஏற்பட்டுள்ளதால் பதிவான அனைத்து நோய்களிலும் சுமார் 40% கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையே நிரம்பி வழிகின்றன. 

Image removed.

சுமார் 1.3 மில்லியன் மக்களுக்கு அவசரகால தங்குமிடம்  தேவைப்படுகிறது. மேலும் குடும்பங்கள் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் குழந்தை சுரண்டலுக்கு ஆளாகின்றன.

தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதிலும்இ மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதிலும் கவனம் செலுத்தும்இ ஜெருசலேம் காரித்தாஸ் மற்றும் முற்றுகையின் கீழ் பணிபுரியும் அனைவருடனும் காரித்தாஸ் இன்டர்நேஷனலிஸ் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியது. இந்த அமைப்பு அனைவரையும் பின்வருமாறு அழைக்கிறது:

- சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மனிதாபிமான தங்குமிடங்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு;

- மனிதாபிமான உதவி, பாதுகாப்பான பாதைகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பராமரிப்பு தடையில்லாமல் கிடைக்க  உறுதி செய்தல்.


- மனித கண்ணியத்தைப் பாதுகாக்கவும், இது போர்க் காலங்களில் ஒருபோதும் சமரசம் செய்யவோ அல்லது இழக்கவோ கூடாது.


உடனடி போர் நிறுத்தத்திற்கான திருத்தந்தை லியோ XIV இன் புதுப்பிக்கப்பட்ட வேண்டுகோளை கரிட்டாஸ் கூட்டமைப்பு தொடர்ந்து எதிரொலிக்கிறது மற்றும் சர்வதேச சட்டம், மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தை முழுமையாக மதிக்க வேண்டும் என்ற அதன் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.