அவசரகால நிவாரண உதவி - திருஅவை நிறுவனங்கள் உதவி | Veritas Tamil

அவசரகால நிவாரண உதவி - திருஅவை நிறுவனங்கள் உதவி
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கத்தோலிக்க திருஅவை நிறுவனங்கள் உதவி வழங்குகின்றன.
மண்டி, இமாச்சலப் பிரதேசம், ஜூலை 15, 2025— கடந்த வாரத்தில் ஏற்பட்ட மேக வெடிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் துனாக் மற்றும் ஜங்கேலி பகுதிகளில் உள்ள 210 குடும்பங்களுக்கு ஜூலை 14 அன்று சிம்லா-சண்டிகர் மறைமாவட்டத்தின் சமூகப் பணி ஆணையம் மற்றும் கரித்தாஸ் இந்தியா ஆகியவற்றின் தன்னார்வலர்கள் அவசரகால நிவாரண உதவிகளை வழங்கினர். மானவ் விகாஸ் சமிதியின் (Manav Vikas Samiti) இயக்குனர் அருட்தந்தை லெனின் ஹென்றி தலைமையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இயற்கை பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்தியது.
கடுமையான வானிலை இருந்தபோதிலும், மானவ் விகாஸ் சமிதி மற்றும் கரிட்டாஸ் இந்தியாவின் தன்னார்வலர்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து உதவிப் பொருட்களை வழங்கினர். பேரிடரின் உடனடி விளைவுகளைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் அடிப்படை பொருட்களான போர்வைகள், மெத்தைகள, டார்ச்ச்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் கழிப்பறைப் பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும்
தங்களை உடனே சந்தித்துஇ அத்தியாவசியப் பொருட்களை சரியான நேரத்தில் தாராள மனதோடு வழங்கிய உதவி இரு அமைப்புகளின் தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
"இது எல்லாவற்றையும் இழந்தவர்களுடன் ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டிய நேரம்" என்று அருட்தந்தை லெனின் ஹென்றி வலியுறுத்தினார். நிவாரணப் பணியை ஆதரித்த அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் "தேவைப்படுபவர்களை ஆதரிப்பதிலும் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும்" ஒத்த எண்ணம் கொண்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அழைத்தார்.
Daily Program
