நுகம் என்பது அவருடைய அன்பின் வழியை உணர்த்தும் சொல்லாக உள்ளது. ஆம், அவரது அன்பின் படிப்பினையை நாம் ஏற்று அதன்படி வாழ்வோமானால், அவரில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி.
“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’"என்பது முதன்மையான கட்டளை.