கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர்.
ம் பட்டங்கள், பதவிகளால் நம்மை நாமே உயர்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம், கிறிஸ்தவப் பார்வையில் இது தவறு. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் மனமார்ந்த கீழ்ப்படிதலுடன் வாழ்கிறோமா?
நம் வாழ்க்கையில் ஆன்மீக வீழ்ச்சியை நாம் அனுமதிக்கும் பகுதிகள் ஏதேனும் உள்ளதா? நம் "உள்ளத்தை" நாம் தூய்மைப்படுத்தி பாதுகாக்கிறோமா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.