இயேசு நமது நம்பிக்கை | Veritas Tamil


ஆன்மீகப் புதுப்பித்தலுக்கான தியானம்.

ஜூலை 20 ஆம் தேதிஇ திருச்சூர் பெருநகர பேராயரும்இ இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவருமான பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத், கேரளாவின் சாலக்குடிக்கு அருகிலுள்ள முரிங்கூரில் உள்ள தெய்வீக தியான மையத்தில்(Divine Retreat Center) “பவர் 2025 சர்வதேச இளைஞர் மாநாட்டை” தொடங்கி வைத்தார்.

பேராயர் தாழத் தனது உரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஜெபத்தின் மூலம் கிறிஸ்துவில் வேரூன்றி இருக்கவும், நற்செய்தியின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளின்படி தீவிரமாக வாழவும் வலியுறுத்தினார்.

"சமூகத்திலும் திருஅவையிலும் சேவை, நன்மை மற்றும் கருணை நிறைந்த வாழ்க்கையில் பொறுப்பானவர்களாகவும் உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க கடவுள் நம்மை அழைத்து ஆசீர்வதித்துள்ளார்" என்று பேராயர் கூறினார்.

"நம்பிக்கையின் திருப்பயணிகள்" என்ற ஜூபிலி ஆண்டு கருப்பொருளைப் பற்றிப் பிரதிபலித்த  பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் "இயேசு நமது நம்பிக்கை".  மேலும் நாம் உலகிற்கு நம்பிக்கையின் மக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்" என்று மேலும் கூறினார்.

1987 ஆம் ஆண்டு வின்சென்டியன் சபையின் ஆன்மீக முயற்சியாக நிறுவப்பட்ட இந்த தெய்வீக தியான மையம் (Divine Retreat Center) நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் வாராந்திர தியானங்கள் மற்றும் ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

இந்தியாவில் உள்ள வின்சென்ஷியன் சபையின் மாகாண தலைவரான அருட்தந்தை அலெக்ஸ் சலங்கடி தனது தொடக்கச் செய்தியில், பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் புதுப்பிக்க ஒரு வாய்ப்பாக மாநாட்டைப் பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வை அறுமையாக நற்செய்தி பகிரும்  அருட்தந்தை அகஸ்டின் வல்லூரன் வி.சி மற்றும் பேச்சாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் குழு வழிநடத்துகிறது. "சர்வதேச இளைஞர் மாநாடு இயேசுவின் முன்னிலையில் ஒன்றுகூடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்" என்று அருட்தந்தை வல்லூரன் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் பங்கேற்பைப் பெற்றுள்ளது என்று துணைவேந்தர் அருட்தந்தை ஜோசப் எடட்டு தெரிவித்தார். இந்த மாநாட்டில் கடவுளின் அன்பு, கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனநிலையோடு இருத்தல் மற்றும  சரணடைதல், பாவம் கட்டளைகள் மற்றும் பலவற்றைப் பற்றிய அமர்வுகள் இடம்பெறும்.