இளைஞர்களுக்கான திருத்தந்தையின்  வீட்டுப்பாடம்! | Veritas Tamil

பெருவிய இளைஞர்களுக்கான திருத்தந்தையின்  வீட்டுப்பாடம். 


'கிறிஸ்துவின் நற்செய்தியை மீண்டும் கொண்டு வாருங்கள்'
இளைஞர்களின் யூபிலியில் பங்கேற்கும் பெருவின் இளைஞர்களுக்கு திருத்தந்தை லியோ XIV "வீட்டுப்பாடம்" வழங்கினார்.  யூபிலி கொண்டாட்டத்ததை புகைப்படங்களில் நினைவுகளைப் பாதுகாப்பதற்காக விடக்கூடாது, மாறாக கிறிஸ்துவின் நற்செய்தியை வீட்டிற்கு கொண்டு வரவும், அவர்கள் சந்திக்கும் அனைத்து மக்களிலும் கிறிஸ்துவின் முகத்தைக் காணச் செய்யவும் அழைப்புவிடுத்தார்.

ஜூலை 28 திங்களன்று ரோமில் உள்ள பெருவைச் சேர்ந்த இளைஞர்களிடம் உரையாற்றிய திருத்தந்தை. நீங்கள் பெருவுக்கு மீண்டும் திரும்பும்போது, அந்த நாடுகளை நற்செய்தியின் மகிழ்ச்சியாலும், வலிமையாலும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாலும் நிரப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

"நம்பிக்கையின் திருப்பயணிகள்" என்னும் யூபிலியின் புனித ஆண்டு நிகழ்வை ஒன்றாகக் கொண்டாட ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சந்திக்கத் தயாராக இருக்கும் திருத்தந்தை, வந்திருக்கும் அனைவரையும் அன்போடு வரவேற்றார். "உங்களை இங்கே பார்த்தது"  உங்களின்  குடும்பங்களையும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பயணத்தை சாத்தியமாக்குவதற்கு பெரும் தியாகங்களையும், கடின உழைப்பும் செய்த உங்கள் பங்குதளங்களிலும் உள்ள அனைவரையும் பற்றி சிந்திக்க வைத்துள்ளது என்று கூறினார்.  

திருஅவையின் குடும்பம்
அன்றைய வாசகங்களைப் பற்றி சிந்தித்த திருத்தந்தை "நாம் சிறியவர்கள் தான் ஆனால் நாம் தனியாக இல்லை" என்று குறிப்பிட்டார்.

"இறைமகன் இயேசு நினைத்தது போல நாம் அனைவரும் ஒரு பெரிய குடும்பமாக மாற வேண்டும். அதுவும் திருஅவை என்னும் குடும்பத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும். கிறிஸ்துவில் இணைக்கப்பட்டு, திராட்சைக் கொடிகளைப்போல் வளர்ந்து,  கனி கொடுக்க வேண்டும்.

திருப்பாடல் 68 யைக் குறித்து  புனித அகுஸ்டின் கருத்து தெரிவிக்கையில், சிறியதாக இருக்கும்  ஒன்றின் வலிமையை  எடுத்துக்காட்டியதை திருத்தந்தை நினைவு கூர்ந்தார். அது வளரும்போது,  பூமி முழுவதும் பரவியிருக்கும் கடவுளின் மக்களில் வேரூன்றுகிறது என்பதை வலியுறுத்தினார்.

வீட்டிற்கு நற்செய்தியைக் கொண்டு வாருங்கள். நீங்கள் சந்திப்பவர்களுக்கு கிறிஸ்துவின் முகத்தைப் பரப்புங்கள்.
இன்றைய  நாட்களில் அனுபவிக்கும் அனைத்தையும் கடந்த காலத்தின் நினைவாக வைத்திருக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். "தயவுசெய்து, இங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும்  சில அழகான புகைப்படங்களில் ஒரு நினைவாக மட்டுமே இருக்க விடாதீர்கள், மாறாக நீங்கள் வீடு திரும்பியதும் கிறிஸ்துவைப் பரப்புங்கள்" என்று அவர் கூறினார்.

"நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும், கிறிஸ்துவின் முகத்தை உங்களில் காணட்டும். " கிறிஸ்து தன்னை வழங்கி, நம்மை அன்புசெய்தது போல திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரிலும் அவர் இருக்கிறார். 

பெருவின் அன்பான புனிதர்கள்
 "முதலில் நேசிக்கப்படுவதன் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவித்திருப்பதாலும், தந்தையாம்  கடவுளிடமிருந்து அனைத்தையும் இலவசமாகப் பெற்றிருப்பதாலும், அன்றாட வாழ்வில் நடக்கும்  சிறியதிலும் மறைவானதிலும் சுதந்திரமாக அன்பு செலுத்தி சேவை செய்யுங்கள்" என்று திருத்தந்தை அவர்களை வலியுறுத்தினார்.

"இந்த நாட்களில் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே சுமந்து செல்லுங்கள். இதுவே உங்களிடம் நான் ஒப்படைக்கும் பணியின் அடையாளமாகும்". "நீங்கள் எங்கு சென்றாலும், நமது அன்பான பெருவின் புனிதர்கள் இருந்ததைப் போலவே, இறைவனின் பிரசன்னத்தில் இருங்கள். அதாவது மறைபோதகர்களைப் போன்று இருங்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.