'திருத்தந்தையுடன் பேசியது ஒரு ஆசீர்வாதம்’ - அருட்தந்தை ரோமனேல்லி. | Veritas Tamil

'திருத்தந்தையுடன் பேசியது ஒரு ஆசீர்வாதம்’ - அருட்தந்தை ரோமனேல்லி.
காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின் பங்குத்தந்தையான அருட்தந்தை கேப்ரியல் ரோமனேல்லி, செவ்வாய்க்கிழமை அன்று திருத்தந்தை லியோ XIV -உடன் தொலைபேசியில் பேசியது ஒரு ஆசீர்வாதம் என்று கூறினார். அங்குள்ள மக்கள் அபாயங்களுக்கு மத்தியிலும் தங்கியிருப்பதால், அந்தப் பங்கு, முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் உட்பட 450 பேருக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.
போரில் துன்பப்படும் மக்களின் அழுகுரல் கடவுளுக்கு ஒரு நம்பிக்கையான வேண்டுதலாக மாறட்டும் - திருத்தந்தை.
காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை கேப்ரியல் ரோமனேல்லி, காசா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்ட பிறகு, 'திருத்தந்தை லியோ XIV-விடமிருந்து தனக்கு அழைப்பு வந்தபோது தான் அடைந்த மகிழ்ச்சியை ஒரு வீடியோ செய்தி மூலம் பகிர்ந்து கொண்டார்.
“நிலைமை கடினமாக இருந்தாலும், நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று நாங்கள் அவரிடம் கூறினோம்,” என்று அந்த அர்ஜென்டின அருட்தந்தை கூறினார். 'திருத்தந்தை எங்களுக்கு ஆசீர்வாதம் அளித்து, எங்களுக்காகவும் அமைதிக்காகவும் ஜெபித்தார். அவர் அனைத்தையும் உன்னிப்பாகப் கவனித்து வருகிறார். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அவர் உறுதியுடன் இருக்கிறார்.”
திருக்குடும்பப் பங்கு, முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 450 இடம்பெயர்ந்த மக்களுக்குத் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருகிறது. “பெரும்பாலான மக்கள் வெளியேற விரும்பவில்லை,” என்று அருட்தந்தை ரோமனேல்லி விளக்கினார். “எங்கும் ஆபத்து இருந்தாலும், பலர் நகரத்திலேயே தங்க விரும்புகிறார்கள். நாங்கள் அவர்களுடன் இருந்து, எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்.”
துன்பங்களுக்கு மத்தியிலும், சமீபத்தில் அந்தப் பங்கில் ஒரு திருமணம் நடைபெற்றதுடன், மார்கோஸ் என்ற ஆண் குழந்தை பிறந்ததும் கொண்டாடப்பட்டது. “இவ்வளவு வேதனைகளுக்கு மத்தியிலும், கடவுள் எங்களுக்கு வாழ்வின் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளங்களால் ஆசீர்வதிக்கிறார்,” என்று அந்தப் அருட்தந்தை கூறினார்.
“நாம் தொடர்ந்து அமைதிக்காகவும், காசா முழுவதற்காவும், மத்திய கிழக்கு மற்றும் உலகத்திற்காகவும் ஜெபிப்போம். இறைவன் புனித கன்னி மரியாவின் பரிந்துரையால், நமக்கு அமைதி என்ற அற்புதத்தை வழங்குவாராக.”
Daily Program
