செப வழிபாடு தொடங்கி நூறு நாள் ஆனது... இருநூறு நாள் ஆனது... ஓராண்டும் நிறைவுப் பெற்றது.... 550 வது நாள் கொண்டாட்டமும் முடிந்தது.... தற்போது 4 ஆண்டுகளை கடந்து ஆயிரமாவது நாளை எட்டிப்பிடித்து, ஆயிரத்து ஐநூற்று ஐம்பதாவது நாளை ஆகஸ்டு 23 அன்று தொட்டு மகிழ்ந்து, தொடர்ந்து ஜந்தாம் ஆண்டு நோக்கி செபித்து வருவது இக்குழுவின் மாபெரும் சாதனை.
எதிர்நோக்கின் வாகனம் என்று திருத்தந்தையின் வாகனமானது பெயரிடப்பட்டு, தொற்றுநோய்களுக்கான உடனடி சோதனைகள், தடுப்பூசிகள், நோய்களைக் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுடன் பிற உயிர்காக்கும் பொருட்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.