விதிகள் மற்றும் சடங்குகளின் நோக்கம், மற்றவர்கள் மீது கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நபர்களாக நம்மை உருவாக்க உதவுவதாகும். இது நிகழாதபோது, விதிகள் மற்றும் சடங்குகள் தேவையில்லை.
நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி கடவுளிடம் திரும்புவதற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக இருப்பது நமது தற்பெருமை. பலருக்கு வழிதவறிச் சென்றதை ஒப்புக்கொள்வது கடினம்தான். அவ்வாறே, நாம் செய்ததை ஏற்றுக்கொண்டு, கடவுளிடம் அவரது மன்னிப்பு மற்றும் இரக்கத்திற்காக திரும்புவதும் கடினம்தான்.
பேதுரு தனது அச்சத்தையும், குழப்பத்தையும், போராட்டங்களையும் தாண்டி, இயேசுவின் மீது தனது முழு நம்பிக்கையையும் வைக்க, இந்த தனிப்பட்ட அவரது வல்ல செயலின் (மீனில் நாணயம் காணுதல்) அருள் அவருக்குத் தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார்.
அன்பு நிறைந்த தியாகமே நம்மை காத்துநிற்கும். இத்தகைய அன்பு கலந்து தியாகமே நமக்கான அழைப்பு. ஆகவே, தன்னலம் துறப்பது மட்டுமல்ல, நமது சிலுவையான துன்பத் துயரங்களை நாமே சுமக்க வேண்டும். அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதல்ல.
இன்று இந்த மலையில் இயேசு தம் மாட்சியை வெளிபடுத்துகிறார். இந்த மாட்சி தந்தை தம் மகனுக்கு உரியதாக்கிய மாட்சி. இன்னும் சிறிது காலத்தில் அவரது இகழ்ச்சியை கல்வாரி மலையில் வெளிப்படுத்தவுள்ளார். இந்த இகழச்சி மனுக்குலம் அவருக்குச்சூட்டிய மணிமகுடமாக அமையும்.
கீழே பார்க்காதீர்கள், கடவுளை நோக்கிப் பாருங்கள். நமது புயல்களான பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பார்க்காதீர்கள், மாறாக இயேசுவின் மீது கவனம் செலுத்துவோம். இயேசுவின் மீது மட்டுமே நம் கண்களைப் பதிய வைப்போம்.
இந்த ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே வல்ல செயலாகும். ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது, இயேசு இந்த அற்புதத்தைச் செய்வதற்கு பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு விடுதலைப் பயணத்தின் போது, பாலைநில உணவளிப்பு நிகழ்வை வலுவாக எதிரொலிக்கிறது.
இயேசுவும், மறைபொருளாக இருக்கும் விண்ணரசை சில உவமைகள் வாயிலாக எடுத்துரைத்தப்பின், “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேடகிறார். சீடர்களும் “ஆம்” என்கின்றார்கள்.
கடுகுச் செடி கேதுரு மரம் போல வானத்தை நோக்கி நேராக வளராது. மாறாக, அதன் கிளைகள் நான்கு பக்கமும் படந்து பெரும் குடைபோல் காட்டியளிக்கும். ஒரு காலத்தில் திருஅவையும் இறையரசின் ஒப்புவமையாக உலக முழுவதும் தழைத்து வளர்ந்து மானிடருக்கு மீட்பின் அடையாளமாக விளங்கும் என்பதை இயேசு விவரிக்கிறார்.
நம் ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல மற்றும் தீய குணங்களையும் குறிக்கின்றன. நம் அனைவருக்கும் மனதுக்குள் நன்மையும் தீமையும் உண்டு. எனவே, மற்றவர்களை அவசரப்பட்டு நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று தீர்ப்பிடுவதும் கூடாது பொறுமை காக்க வேண்டும்.
இயேசுவைச் சுற்றி கூடியிருந்த மக்களைவிட, சீடர்கள் பேறுபெற்றவர்கள் என்கிறார் ஆண்டவர். ஏனெனில், அவர்களின் ஆன்மீகக் கண்களும் காதுகளும் திறக்கப்படுகின்றன கடந்த கால இறைவாக்கினர் தவறவிட்ட விடயங்களை சீடர்கள் அறிந்திட வாயப்புப்பெற்றுள்ளனர் என்கிறார் ஆண்டவர்.
ஒவ்வொரு விதையின் வளர்ச்சியை மூன்று பிரிவாகப் பார்க்கலாம்
1.மண்ணைப் பிளந்துகொண்டு வெளியே வரும் முளை.
2.கதிராக வளர்ந்து வரும் செடி.
3.கதிருக்குள் தானியம் கொண்ட முதிர்ச்சி